திங்கள், 8 ஜூன், 2009

" உண்மைக்காதல்"

எடுப்பதும், கொடுப்பதும்,
எடுத்ததை; திருப்பிக் கொடுப்பதும்,
உண்மைக் காதலில்
விடுப்பது அல்ல!

தடுப்பது, தடம் புரள்வது,
கெடுப்பது, கடுப்பது, துடுப்பது எடுத்து
அடுப்பதும், கொடுப்பது
உண்மைக் காதல் அல்ல!

உடுப்பதையிழந்த கைபோலே,
அன்பைப் பொழிவது,
துடுப்பது கிடைத்த வள்ளம் போல்,
துணையிருப்பதே உண்மைக் காதல்!

உடுப்பதும்,
உடுப்பதைக் களற்றி எறிவதும்,
முடக்கி மூலையில் படுத்திட வைப்பதும்,
வடுப்படும்படி மனத்தைச் சிதைப்பதும்,

சதைப்பற்றில் சாகடிப்பதும்,
வதைத்திடும்படி நடப்பதும்
விடுப்பதும், நடிப்பதும்,
கொடுப்பது அல்லக் காதல்!

கடுப்புடன்
கனன்று கொதிப்பதும்,
நடுத்தெருவில் விட்டு உதைப்பதும்,
கொடுப்பது அல்லக் காதல்!

நடுக்கடலினில்
துடுப்பதைப் போல்,
துன்பம் துடைப்பதே உண்மைக்காதல்
இன்பம் கொடுப்பதே தண்மைக் காதல்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
9-8-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3074&hl=

" பாசப்பிடிப்பு"


கிட்ட இருந்தால் முட்டப்பகை!
எட்ட இருந்தால் கிட்டும் சுனை!
நட்ட நடு வீதியில்
நாம் தனியே போகையில்
கிட்ட வரும் விபத்தை
தட்டி விடும் கைகள்
எட்ட வரும் உறவா!
உதரம் கட்டி வரும் உறவா!


'கிட்ட இருந்து கொண்டு
முட்டிமோதும் நிலையைவிட
எட்ட இருந்து கொண்டு சமயம்
கிட்டு கின்ற போதெல்லாம்
ஒட்டி உறவாடுவதில்
ஓர் நிறைந்த சுகம் உண்டு' என்று
எட்ட வந்த புலம்பெயர்
வாழ்வது கூறுகிறதே!


"பட்டம் பதவிகள் பெற்ற பின்பு
சுற்றம் என்ன! சூழம் என்ன!"
என்று படித்த பல பண்பரசர் பறை
கொட்டி முழக்கு கையில்
நீட்டி யளக்கையில்
எட்ட இருந்து கொண்டு
பாசம் கொட்டி விடத்
துடிக்கின்ற உண்மைத் துடிப்பு அது

கட்டி யணைத்து உணர்வால்
துடிக்கின்ற துடிப்பு அது
மட்ட மான உறவு அல்ல!
மேல் மட்டமான பாசப் பிடிப்பு அது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"விடைதேடும் படலம்"


விடை சொல்ல வழி தெரியவில்லை!
மடைதிறந்த மொழி வெள்ளமென,
படை கொண்ட மொழி அள்ளிவரும்,
தடையின்றி உளி சொல்லும் சிற்பம் போல்,

"விடை சொல்வாயா! ஆதி
விடைசொல்வாயா" என்ற,
நடைசோல்லும் கணைகள் மோதி,
நடை போடும் தமிழ், என்னை
விடைசொல்லச் சொல்கிறதா!
தடை தாண்டச் சொல்கிறதா!

கடைநிலை கொண்ட மாந்தர்
நடைகளை நாம் பார்க்கும் போது,
விடையொன்று தெரிகிறது!
எடைநிலை கொண்ட மனத்தோடு, வாழ்வில்
விடைதேடும் பார்வைக்குள் தடம் பதிக்கும்போது,
உடைகளைகிறது! உயிர் அது பிரிகையில்,

நடைமுறை வாழ்வதன் நிலை அது தெரிகிறது!
தடைகளை உடைத்தெறிய, தழுவிடும் தர்மநீதி,
நடை தன்னையே உயிருடன் மறுபிறவிக்குள் இணைக்கிறது!
விடையிதில் ஒன்று! நம் நடைபாதை வாழ்வியல்
கடைநிலை என்றானால்,விடையிதில் ஒன்று! நம்
நடைபாதைதனில்,நாம்சந்திக்கும் தடைகளெல்லாம்,

உடைகின்ற நிலைவேண்டி படாதபாடு
நாம் படவேண்டி, தடம்புரண்டு செய்தவறுகள்,
சடைகின்ற தலைகீழ் நிலைகள்தான் தண்டிக்கும் நிலைக்குள்,
நம்மைக் கொண்டுசென்று விடுகிறது!
"உடைகின்ற நீர்க்குமிழி வாழ்வு" என்று கண்டவர்கள், "எந்நேரமும்
நாம் உடையலாம்" என்றுகண்டு,

நடைபோடும் வாழ்வியலில், மற்றவர்க்கு
துன்பமதை, கொடுக்காத
நிலையோடு பார்த்துக்கொண்டால் போதுமே!
விடைதேடும் மனவிழிகள் கடைத்தேறும்!
தடைகள் தாம் தானாக உடைந்து,
இன்பம் வாழ்வியலில் நடைபோடும்!

குடைகின்ற கேள்வியதன்
பதில்தானும் கிடைத்துவிடும்!
தடுமாறும் நிலைதானாய்
நமை விட்டு மறைந்துவிடும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

"தேன்தமிழ்த் தென்றலின் இனிய தேடல்!"

தேடலின் தேடல்,
தேவையைப் பொறுத்து
நாடலில் தீரும்!

வாடலில் தேடல் இதய
வாடலில் தேடல்,
ஓடிட ஓடிட,

நாடலில் நாடும்
தேவைகள் கூடும்!
கூடிடக் கூடிட,

தேடலில் ஓடும்!
வாடலைக் கூட்டும்!
காடதைத் தேடிட

ஓடிட வழி வகுக்கும்!
ஓடிட ஓடிட
ஓடிடும் மனங்கள்,

நாடிட நாடிட,
நம்மைத்துரத்திட
நட்டாற்றில் தவிக்க வைத்திட,

வாடிட, மனங்கள் துடிப்பதை.
நம் கண்முன்னால் காண்பதை,
மறுத்திடமுடியுமா!

நாடிட, நல்வழி நாடிட,
நமைதுரத்தும்
துன்பங்கள் தொலைந்திட,

நாடிடு! மனமே நாடிடு!
நல்வழி தன்னை நாடிடு!
தினம் தினம்

தேடிடும், நல்வழிப் பாதையை
நன்றாய்த் தேர்ந்தெடு!
தேர்ந்தபின்,

நாடிய பாதையில்
தடம் புரளாது,
மனந்தனை ஒன்றாய் நிறுத்தி,

வாடிடும் வாட்டத்தைப் போக்கிடு!
வாட்டத்தைப் போக்கி,
வருங்காலத்தை நீ வரவிடு!

தேடலின் தேடல் வேண்டும்!
தெளிந்த நல்
நீரோடைபோலே,

நாடலில் நாடல், நம்
இதயங்கள் தேடும் தேடல்!
நல் நூல்களைத் தேடிச்சென்று,

நாடலில் இன்பங்கூடும்!
நம் இதயங்கள் அமைதிகாணும்!
இயற்கைச் சுகங்களில்

தேடல்! பிறர் மனங்களைச்
சிதைக்காத்தேடல்! தென்றல்
சுகங்களை வரவுவைக்கும்!

பாடலில் தேடல்!
நற்பாடலில் தென்றல் கூடல்!
இதய வாடலைப் போக்கும் தேடல்!

கூடலில் கூடல்! நல் இதயங்கள்
ஒன்று கூடல்! கூடிய மனங்களோடு
சுகங்களின் இனிய தேடல்!

தேடலில் தேடல்! நல் கவிதையின்
பொருளைத்தேடல்! நாடிடும் மனங்களோடு
நற்பண்புடன் இனிய தேடல்!

ஊடலில் உணர்வுகண்டு, உள்ளங்கள் நன்று
தேடல்! தேடலில் இனிமைத் தேடல்!
நல்லிதயங்கள் இனிமைத்தேடல்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3103&hl=

"மலரோடு மௌனம்"

நிலவோடு நீங்காத
நினைவோடு நானிருக்க
நிலவோடு தூங்காத
மனதோடு நீயிருக்க
கலவோடு தாங்காத
கனவோடு தானிருக்க-தென்றல்
குலவோடு ஏங்காத
மலரோடு மௌனம் ஏனோ?...

சிலரோடு சிலராக
சில்லறையாய் சில்மிசங்கள்
பலரோடு பலராகி
கல்லறையாய் கல்மனங்கள்
மலரோடு மலராகி
மெல்லனவே நல்மனங்கள்-முன்றலில்
உலரோடு உலராகி
சொல்லெனவே மௌனம் கொல்வதேனோ?..

பலவோடு பலவாகி
பலாப்பாலாகி பலமனங்கள்
நிலவோடு நிலவாகி
நிலாப்பிள்ளையாய் நிலமனங்கள்
கலவோடு போலாகி
கலாரசனைகளை கலைத்துவிட-மன்றம்
நிலவோடு நூலாகி நிலைமறந்துவிடும்
மலரோடு மௌனம் ஏனோ?;...

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3108&hl=

"அவனை மறந்துவிடு!"


தடுமாறும் மனங்கள்
தலைகீழாய்ப் போகும் நிலை!
'வடு ஆறும்' என்று மேலும்
வடுக்கூட்டும் தலைகீழ்நிலை!
கொடு அன்பை! எடு அன்பை!
விடு வம்பை! மனம்
கடுகடுத்து ஆவதொன்றும் இல்லை!
உன் காயங்கள்

ஆறும் நிலை! மாறும் நிலை!
உன்மனப்பதிவின்
மாறும் நிலை! உன் தடு
மாறும் நிலை! விதிப்பழி
கூறும் நிலை! உன் மனத்தராசில்
உனைச் சரிபார்! அது
கூறும் நிலை! உன் மதித்தவறாயின் மதிப்படி
உன்நிலை பார்!

பார்த்திருக்கும் விழிகளுக்குப்
பதில் சொல்! உனைச்
சேர்த்திருந்த வழிமன்னவனின் நிலை பார்!
'உனைத்தவிக்கவிட்ட
காத்திருந்து கண்ணீர் வடிக்கவிட்ட கயவனா
அவன்!' என்று உன் இதயம்
சேர்த்திருந்து கண்ணீர் வடிப்பதாயின்
அவனை மறந்துவிடு!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

"வாழிநீ! பாரதி! வாழிநீ!"


'பாட்டுக்கொரு புலவன் நீ!"
வீட்டுக்கும் நாட்டுக்கும்
ஏட்டுக்கும் ஒளிகூட்டும்
பாட்டுக்கொரு புலவன் நீ!

நாட்டுக்கொரு புலவன் உனைப்போல்
நாட்டுக்கொரு பாட்டுப்புலவன் வழி
காட்டப்பிறந்தால் நாடுபிழைக்கும்
காட்டுக்கூச்சல் போட்டு

பாட்டைக்கெடுக்கும் கூட்டத்துள்
"ஏட்டுப்படிப்புமட்டும்
கோட்டைக்குள் நுழையும்" என்ற
கூட்டுக்கூச்சல் ஓருபுறம்! இதயக்

கூட்டுக்கூச்சல் மறுபுறம்
"நாட்டுப்பிடிப்பு" என்று
நாட்டைக்கெடுக்கும் கூட்டம் ஒருபுறம்
காட்டு மிராண்டித்தனத்தைக் காட்டி

கூட்டுமிருகங்களைக்கூட்டி
பாட்டுப்பாடும் கூட்டம் ஒருபுறம்!
பாராட்டுப்பெறும் கூட்டம் மறுபுறம்!இதற்கொரு
வேட்டுவைத்து தகர்த்து விடியல்தனைக்

காட்ட உனைப்போல் ஓரு
பாட்டுப்பாடும் புலவன்
நாட்டுக்கு வேண்டும் பாரினில் பாரதி!
பாட்டுக்கொரு புலவனாய்

நீ பிறந்த நாள் இன்று! - இதய
வாட்டங்கள் போக்கிட
நீ உதித்த நன்னாள் இன்று!
வீட்டுக்கொரு விளக்கேற்றி விடியல்தனைக்

காட்டிய நாள் இன்று!
கூட்டங்கள் நீக்கி இதயக்
கூட்டினைத்திறந்து சுதந்திரக்காற்றைச்
சுவாசிக்க நீ வந்த நாள் இன்று!

ஆட்டுமந்தைக்கூட்டத்துள் அடங்கிப்போகாமல்
அடிமைவிலங்குக்குள் அடங்கிப்போகாமல்
மோட்டுமந்தைக்குள் முத்தெடுக்க நுழைக்காமல்
பாட்டுப்பாடும் குயிலாய் சுதந்திரமாய்

பாட்டுப்பாடிய பாரதியே! நீ
காட்டிய பாதைகள்! நீ மீட்டிய வீணைகள்
வாட்டிடும் மனங்கட்கு கதிரொளியே! கிழக்குக்
காட்டிடும் பாதைகள் உன்வழியே! வாழி நீ! வாழிநீ!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

"மனச்சாட்சிகள் உண்மைபேசும்!"

கண்ணுக்குள் கவிதைபாடி
களித்திருந்தகாலங்கள்!
மண்ணுக்குள் கவிதையுன்னால்
புளித்துப்போன கோலங்கள்!
விண்ணுக்குள் நிலவு போல
விதந்துரைத்த காலங்கள்!மனப்
புண்ணுக்குள் உலவுகின்ற
கசந்துவிட்ட காயங்கள்!

"பெண்ணுக்குள்பெருமை" என்று
பேரின்பவெள்ளமென
கண்ணுக்குள் கண்ணாக
அன்று எனைக் கொடுத்தேன்!
மண்ணுக்குள் உடல் மறைந்தாலும்
மறையாதே என்று
கண்ணுக்குள் "ஆத்மாவின்
ராகங்கள் நீ" என்றேன்!

எண்ணுக்குள் எழுத்தாய் என்
எண்ணத்தில் மலர்ந்த
வண்ணத்துள் நிறைந்த கவிதை
வண்ணத்தை உந்தன் கை
வண்ணத்துள் திணித்தேன்! எந்தன் மன
வண்ணத்தைச் சிதைத்து
கண்ணுக்குள் கண்ணான என் கவிமலர்களை என்
கண்ணுக்குள் நிறைந்த கவிமலர்களை என்

கண்ணுக்குத் தெரியாமல் உன் பெயர்
வண்ணத்தில் பதித்தாய்!
விண்ணுக்குத் தெரியும்
என் கவிதை அதுவென்று! இதய மலர்
வண்ணத்துவாசகர் இதய மன்றத்துள் தெரியும் அது
என் கவிமலர்களென்று!
எண்ணத்து நீச(கி)கர் நீ சதிசெய்தது ஏனென்று
என்தனுக்கு நன்கு புரியும்!

கண்ணுக்குள் மலர்ந்த
காதலைக் கொச்சைப்படுத்தி இதயப்
புண்ணுக்குள் வேல் பாய்ச்சி
போதை உன் இச்சையைத்தீர்க்கலாம்!
விண்ணுக்குள் அமாவாசை உன்
இதயத்துள் தினம் அமாவாசை! உன்
கண்ணுக்குள் நிறைந்த காமம்
காதல் கருத்தினை அழித்த மோசம்!

மண்ணுக்குத் தெரியவரும்! உன்
மானமும் கப்பல் ஏறும்!
விண்ணுக்குத் தெரியும் நேரம் உன்
வேசமும் கலைந்துபோகும்!
பெண்ணுக்குப் பெருமைபேசும் உன்
நாடகம் தெரியும் நேரம்
மண்ணுக்குப் புரியும்!
மனச்சாட்சிகள் உண்மை பேசும்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.blogger.com/post-create.g?blogID=5275467254641743329

ஞாயிறு, 7 ஜூன், 2009

'உனக்காக!"

திரும்பிப்பார்த்தால் அருவெருப்பு!
அரும்பும்பொழுதே தெரிவதுண்டு!
இரும்பு இதயம் எதுவென்று!-எனவே
கரும்பின் கதைதான் அருமருந்து!

துரும்பாய் இழைத்து துவண்டுவிடும்!
கரும்பாய் நினைத்துக் கசந்துவிடும்!
இரும்பாய் இதயம் இருந்துவிட்டால்-நீ
திரும்பாய்! திரும்பிப்பார்த்திட விரும்பாய்!

திரும்பும் திசைகளில் உன்னிதயம்
விரும்பும் மனங்களில் அசைந்துவரும்!-இதயம்
அரும்பும் இசைகளாய் பின்னிவர
விரும்பும் தினங்களும் இசைந்துவரும்..

திரும்பிட நினைத்தால் நல்வழிதிரும்பு
விரும்பிட மனத்தால் நல்மனந்திரும்பு!-நீ
இரும்பிடம் பேசும் கொள்கை விடு!
திரும்பிடும் நேசம் கொள்கை எடு!

வரும்பிணி விலகும்! வாழ்வது துலங்கும்!
அரும்பணி தொடரும்! ஆழ்கடல் முத்தாய்-உனை
வரும்பணி மிளிரும்! வானமும் வாழ்த்தும்!
தரும்பிணி விலக தருமும் தளைக்கும்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3348&hl=

"எனக்குள் நீ!"

அருணன் உந்தன் பெயரதுவாய்
எந்தன் பெயர்தான் இணைந்தபோது
'தருணம் இதுதான்' என்று நான்தான்
உன்தன் பெயருள் ஒளிர்ந்து நின்றேன்!
அருணன் நீ தான் வயப்பட்டாய்;! வாழ்வில்
வரவு அதுவாய் இணைத்திட்டாய்!
'தருணம் இதுதான்' என்றிட்டாய்!
காருண் யன் அதுவாய் இணைந்திட்டான்!

இருளும் அதுவாய் அகன்றது!
அருளும் வந்து இணைந்தது!
பொருளும் இதுவாய் புரிந்தது!
புகழும் வந்து நிறைந்தது!
மருளும் மனம்தான் அகன்றது!
புலரும் பொழுதாய் மலர்ந்தது!
சுருளும் தனம்தான் வரிந்தது!
சுகமும் முழுதாய் இணைந்தது!

வருடும் தென்றல் இணைந்தது!
வாழ்க்கை வசந்தம் ஆனது!
திருடும் மனங்கள் அகன்றது!
திகழும் திங்கள் தவழ்ந்தது!
குருடும் முன்றல் மறைந்தது!
சீழ்க்கை சிரங்கும் அழிந்தது!
வருடும் தினங்கள் வளர்ந்தது!
மகிழும் மலரும் மலர்ந்தது!

பருகும் தேனாய் நீ வந்தாய்!
பழகும் தமிழே! நீ நிறைந்தாய்!
உருகும் பாகாய் உன்னன்பில்
அழகும் சுகமும் நீ தந்தாய்!
அருகும் வானாய் நீ ஒளிர்ந்தாய்!
அழகே! உயிரே! என்வசமானாய்!
பருகும் பாலாய் என்னன்பாய்!
அருணனே! ஆதித்தா!நீயும் வந்தாயே!

நன்றி
சுகம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3138&hl=

என் நினைவுகளில் நீ (148)


இதயத்தில் உதயமதைத்
தழுவிவரும் இளந்தென்றலே!
உதயத்தைத் தரிசிக்கும்
உயிர்களின் உரிமைத் தழுவலிது!
இதயத்தை இணைத்துவைத்து
இருவரின் துடிப்புதனை
உதயத்தில் வரவுவைத்த
உயிர்களின் இன்பத்தேடலிது!

கதைகளில் கவிதைகளில்
காவியத்தில் ஓவியத்தில்;
விதைகளின் விடியல்தனில்
ஓவியத்தின் காவியமாய்
சிதைகளில் சிதைந்திடாத
சிற்பங்களில் சொற்பதமாய்
சதைகளில் சந்திக்கா
சரித்திர விற்பன்னன் செதுக்கியது!

புதையலில் புதையல் இது!
புதுமைக்குள் புதுமையிது!
கதைகளில் தழுவல்தனை
காதலின் நினைவுகளை,
விதைகளில் தாங்கிவரும்
சாதனைத் தழுவல் இது!
விதைகளில் விடியல் வேதனை
விடியலின் விடியல் இது!

புதைகுழிகளில் புகுந்திடா
புகழ் உச்சியின் உயரம் இது!
வதைகுழிகளில் வதங்கிடா
வளம் பெற்ற வடிவம் இது!
கதைகளும் பல
காதல்கதைகளும் மலர்ந்த இடம்!
உதைகளும் உணர்வுகளின்
நினைவுதைகளும் இணைந்த இடம்!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்.

"புத்திதரும் பாடங்கள்!"


புத்திகெட்டுப் போதையிலே
சத்தியத்தை தொலைத்துவிட்டு
முக்திபெற்ற ஞானிகள்போல்
சத்தியத்தைப் பேசுவார்கள்!
சக்திகெட்டுப் பாதையிலே
சாகடிக்கும் மனங்களோடு
புத்தியுற்ற மானிடர்போல்
சத்தியெடுப்பார்கள்!

கத்திகொண்டு காமுகராய்
காட்டுமந்தைக் கூட்டமதாய்
புத்திகெட்ட பாதைகளைக்
காட்டுவார்கள்!- இதய
சுத்தியில்லா மனங்களவர்
கூட்டுகின்ற கூட்டங்களில்
புத்திகெட்ட மந்தைகள்போல்
காட்டுவார்கள்!

தத்திவரும் தங்கங்கள்
தரங்கெட்ட நிலைமாற
புத்திசொல்லும் வித்தைகளைக்
கற்றவர்கள்! இவர்கள்
புத்திதனில் பொங்கிவரும்
சிங்கங்கள் புரிந்துகொள்ள
புத்திவரும் பாடங்களைப்
புகட்டுங்கள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"தேன்மொழி"


நான் நானாக எனக்குள் என்னைத்தேடுகிறேன்!
'ஏன்! ஏன்!' என்ற கேள்வி வேள்வித்தீக்குள்
என்னை எனக்குள் தொலைக்கிறேன்!
தேன் தேனாக தேன்தமிழுக்குள்
என்னைத்தேடுகின்றேன்!
நான் நானாக இல்லை! தென்றலவள்
என்னைக்கூடுகின்றாள்!

மான்விழிப்பார்வைக்குள் மயக்கம்
தென்னை இளங்கீற்றுக்குள் கிறக்கம்!
தேன்மொழிப்போர்வைக்குள் முயக்கம்!
என்னை அரங்கேற்றத்தில் மயக்கம்!
தேன்மொழிமங்கைக்குள் தயக்கம்!
தென்னை இளநீருக்குள் கிறக்கம்!
வான்வழிநிலவுக்குள் மயக்கம்!
தன்னை வளம்குறைத்தாள் என்ற தாக்கம்!

"ஏன்" என்று தேன்மொழியைக்கேட்டேன்
"என்னை என்ன செய்யச்செய்யச்சொல்கிறீர்கள்"என்றாள்!
"நான்ஒன்று சொல்லட்டுமா" கண்ணே!
உன்னை வென்றுவிட முடியாத ஆற்றாமைதான்"எனறேன்!
"தான்"என்ற வான்வழிமங்கை
"தன்னை" தொலைத்துவிட்டால் வெல்லலாம்" என்றேன்!
தேன்மொழி கடைக்கண்ணால் பார்த்தாள்!
"உன்னை தொலைத்துவிட்டாயே என்னுள்"என்றது அவள் பார்வை!

'ஏன்' என்று புரியவில்லையடி"என்றேன்!
"உன்னை நீ இழந்து என்னை நீ பெற்றாயே"என்றாள்!
" நான் என்றுமே நானாகஇல்லையடி கண்ணே!"என்றேன்!
"என்னை நீ கலந்தபின் நீயென்பதேது"என்றாள்!
"தேன்மொழி! நீ என்னை விட்டுவிடாதையடி" என்றேன்!
உன்னை நான்கலந்தபின்பு பிரிவில்லைக் கண்ணா!"
என்றாள்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

"நேரம் நல்ல நேரம்!"


நினைவோடு நேசிக்கும்
யாசிக்கும் தென்றலே!
நினைவோடு நினைவு, கனவோடு கனவு,
கவிதை பாடும் உன்
நினைவோடு உயிராகும்,
உயிருக்குள் உயிராகும் தென்றலாய்,
மனையோடு மருவி,
அருவியாய் அருந்தமிழ்த் தேனாய்,

தினையாக, தினைமாவிளக்கோடு,
திருமால் தழுவிடும்
துணையாக, துணையோடு
துணையாக, இணைதழுவிடும்
மனையாக, மனதோடு மலராக,
மருவி மகிழ் மலர்ந்திட,
பிணையாக, கரும்பிணையாக,
வரும் துணையாகத் தழுவிட,

உனையாளும், விழித்துணையாக,
வழிகாட்டும் திசையாக,
எனையாளும் மொழித்துணையாகி,
மழைத் துளியாக,
உனைப்பாடும், உனைத்தழுவிடும்
தளிர் வசந்தமாய், நான்
எனைத்தேடும், உனக்குள் எனைத்தேடும்,
நேரம் நல்ல நேரம் இது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

"பதில் சொல்லடி செந்தமிழ்ப் பெண்ணே!"


மீசைக்குள் ஆசை
ஓசையின்றி வேர்விட,
பாஷைக்குள் பரிபாஷைக்குள்,
ரோசத்தின் மீசைக்குள்,
நேசம் வீசும் தென்றல்காற்றில் தேரோட,
ஆசைக்குள் ஆசை அதிசயமாய் பேசும்!

முரட்டு மீசைக்குள்,
வரட்டுக்கௌரவம் விட்டோடிவிட,
புரட்டுப் பொய்யர்கள் வேதாந்தம்,
கட்டோடு கலைந்துவிட,
இருட்டுக்கு ஒளியாய், ஒளிக்கதிராய்
உலகுக்கு ஒளியான,
முரட்டு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞனவன்,
பாரதிதான், உன் காதலனோ!

ஏது! ஏது! முரட்டுப் பிடிவாதம்,
முடிசூடும் விந்தையோ!
சூது வாது தெரியாத அடிவானம்,
ஆழ்கடலோடு சங்கமிக்கும் விந்தையோ!
மாது உன் மயக்கம் தீர்க்கும் மன்னவன்,
அந்தத் தென்னவன்தானோ!
யாது பெயர்! ஏது ஊர்! உன் உளம்கவர்ந்த
மன்னவன் யாரோ!

சூதுவாது அறியாத சுகந்தமலர்,
உன் சுகத்தைக் கொள்ளையடித்துப்,
பாதிபாதி சரிபாதி, சுகந்தமதை சுமந்து,
சுகத்தை அள்ளிக் கொடுத்து,
மாதுஏது நீ மயங்கிக் கிடக்க,
மதுரசம் உண்டு களித்துப் பள்ளி கொண்ட,
சோதிசேதி அறியாத பேதையே!
உனைப் பாடாய்ப் படுத்துபவன் யாரடி!

நாதியற்றுத் தமிழ் தவித்தபோது,
வேதியந்தனைத் தூக்கியெறிந்து,
நீதியற்ற நிலைமாற்றி, சாதியற்ற நிலை ஆக்கப்,
பாதியாகத்தன்னை அர்ப்பணித்த,
போதிமரப் புத்தன் போல, ஆதிஞானமதைப் பெற்ற, கவி
பாரதித் தமிழ்க் காதலனோ!
சேதிசொலச் சித்தம் குளிரப்,
பதில் சொல்லடி செந்தமிழ்ப் பெண்ணே!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

"முகத்திரை விலகட்டும்!"


அகத்திற்குள் ஆயிரம்! எகத்தாளம் பேசும்
அகத்திற்குள் ஆயிரம்! சுகத்தாளம் வீசும்
அகத்திற்குள் ஆயிரம்! புறத்தாளம் கூசும் இதய
அகத்திற்குள் ஆயிரம்! முகத்தாழம் பேசும்!

"அகத்தின் அழகது முகத்தினில் தெரியும்!"
ஆன்றோர் வாக்கது அதில் உள்ள உண்மை
அகத்தில் நல் மனம் அறிந்திடும் உண்மை!
சான்றோர் அழகதாய் முகத்தினில் வெண்மை!

நிறத்தினில் அல்ல! குளிர் முகத்தினில்
நிலவதன் வெண்மை! தளிர் மனங்களின்
புறத்தினின் தண்மை! வெளிர் மனங்களின்
புலர்பொழுததன் தன்மை! எழிலதன் மென்மை!

முகத்திரை விலக்கி அகத்திரை பார்த்தால்
இகத்தினில் இல்லை ஏமாற்றம்! உன்
மனத்தினில் இல்லைத் தடுமாற்றம்! உன்
மனத்திரை விலக்கு! உன் மனத்தினைத்துலக்கு!

இகத்தினில் இல்லை இனித்துயரம்! மன
முகத்தினை நீயும் ஒருநிலையாக்கு!
புறத்தினில் இல்லை உன் எதிரி! உன்
அறத்தினில் நீயும் மேல் நிலைச்சுருதி!

சுகத்தினை நீயும் சுயநலத்தினில் நினைத்தால்
இகத்தினில் உனக்கு உயர்வில்லை! மனச்
சுகத்தினில் நீயும் பொதுநலத்தினை நினைத்தால்
ஜெகத்தினில் உனக்கு அழிவில்லை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"தேன்மொழித்தேவதை!"

இரவினில் தாமரை
உறவினில் தேன்மழை...
இரவுகள் தேடியுன் உன்
உறவினில் நான் மழை..

மரபுகள் தாண்டியே
மங்கையுன் தாபங்கள்
இரவுகள் ஏங்கியே
இனிமையின் கீதங்கள்..

உறவினில் இரவினில்
இனிமையில் காலங்கள்
உறவுகள் கூறிடும்
இரவினின் கூடல்கள்..

இரதமாய் உன்மனம்
விரசங்கள் சேர்த்திட
விரதங்கள் முடித்திட
இரதத்தில் ஏறிட..

விரசத்தின் உச்சியை உன்
கலசங்கள் சொல்லிட தேன்
இரசத்தின் இன்பத்தை
உன்னவன் உள்வாங்கிட..

தேன்மொழி மங்கையின்
செந்தாமரை சிவந்திட
மான்விழி பேசிடும்
மருவிடும் மலரிதழ்

வான்வழி மேகம்போல்
தேன்மழை உன் பூவிதழ்களில்..
தேன்மொழி தாகங்கள்
தேன்மழை தீர்த்திட..

வான்மழை மேகமாய் ...
நான்பாடும் ராகங்கள்..உன்
தேன்பாடும் தேன்குரல்
தேன்மழை கீதங்கள்..

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3517&hl=

"கவலைவிடு கிளியே!"


தனிமையைப் போக்க எண்ணி தன்
தனிமையைப் போக்க எண்ணி
இனிமையாய் இணைந்திருந்த உனை
இனிமைத்துணையுடன் இணைந்திருந்த உனை

தனிமைச்சிறைக்குள் தவிக்கவைத்த தரங்கெட்டவர்க்கு
இனிமைச்சுகமறியா புவிமாந்தர் அவர்தமக்கு உன்
கனிமைமனமறியாக் காதகர் அவர்தமக்கு உன்
தனிமைக்கொடுமை எங்கே தெரியப்போகிறது!

'இனிமைக்காலங்கள் நான் இணைந்திருந்த
இனிமைக்காலங்கள் இனியெங்கே வரப்போகிறது! என்
தனிமைத்தவிப்பெங்கே தீர்படப்போகிறது!" என்றவுன்
இனிமை ஏக்கங்கள் தீரும் காலம்வரும்!

தனிமைக்கொடுமைகள் தீரும் காலம்வரும்!
இனிமைக்கனவுகள் அரங்கேறும் காலம்வரும்!
தனிமைச்சிறையுடைத்து உன்னடிமைவிலங்கொடித்து
இனிமைக்கிளியே!உன்னிணைந்தஜோடி உனைமீட்டுவிடும்!

இனிமையுள்ள கிளியே! "தனிமையுனக்கினியில்லை!
இனிமையில்லா அரக்கர் மத்தியில் நீயில்லை!
இனிமைத்துணை நான் உன்னுடன் இருக்கையிலே
இனிமைத்துணைக்கோலம் நமைமறக்கும் சுகராகம்தரும்!"

"இனியென்ன கவலை உனக்கு"என்று உன்ஜோடி
இனிமைநிறைக்கின்ற கிள்ளைமொழிபேசி
தனிமை விரட்டிச்சுகராகம் மீட்டி உன்னுள்
இனிமைச்சுகம் நிறைக்கும் காலம்வருகிறது கலங்காதே!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

"நினைவுகள் போதுமடி!"


முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
சித்திரை நிலவு நீ சந்தம் இசைத்து
முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
நித்திரை மறந்து நிலவு நீ சுகித்திருந்து

முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
இத்தரை மீதில் மீண்டும் கிடைக்கமுடியாத
சித்திரமாய் என்மடிமீது வீணையதாய்
நித்திரை விழித்திருந்து மீட்டிய சுகராகமதாய்

சித்திரைநிலவே! அத்தீபாவளி நினைவிருக்கா!
அத்தனை மனங்களும் பொறாமைகொள்ள
எத்தனை இன்பங்கள்! எத்தனை இன்பங்கள்!
பத்தரைமாற்றான சித்திரையே நினைவிருக்கா!

வித்தைகள் பயின்று வார்த்தைகள் மறந்து
எத்தனை சுகங்களடி! புற்றரை அமர்ந்து
"இத்தனை சுகங்களுண்டா!" என்று நீவிழிமலர்ந்து
வித்தைகள் பயின்ற வினாடியாய் மணிமறந்து

முத்திரை பதித்த அந்தத் தீபாவளி
இத்தரை மீதில் இனிவருமா! சொல்லடிகிளியே!
"பத்தரைக்குப் போகவேண்டும்" என்றாய்!
பத்தரை தாண்டி மறுபத்தரை வந்ததும் மறந்தோம்!

"எத்தனை மணி இப்போ சொல்லுங்கள்!
அத்தனைபேரும் பார்த்திருப்பார்கள் வீட்டில்!
மொத்தமாய்ச் சேர்ந்து வசைபடிக்கப்போகிறார்கள்!
எத்தனை மணி இப்போ சொல்லுங்கள்' என்றாய்!

"சித்திரையே! நீ போகவேண்டுமாடி கண்ணே!
எத்தனை மணியாகட்டும் போகட்டும் விடடி!" என்று
முத்திரை பதித்த முத்தங்கள் நினைவிருக்கா!
அத்தனையும் மறந்து இந்தத் தீபாவளியா!

எத்தனை தீபாவளி வந்து போகட்டும்!
அத்தனையும் தந்திட முடியாத அத்திருநாள்
இத்தரைமீதில் எமக்கு எதற்கடி நிலவே!நாம்
முத்திரை பதித்த அந்த நினைவே போதுமடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

விதிபெரிதா! மதிபெரிதா!" உருவகக்க(வி)தை

வாழ நினைத்தோம்!
வாழ்ந்துபார்க்க நினைத்தோம்!
சூழ நின்ற கயவர்கள்
சூழ்ச்சிசெய்து சிறைவைத்தார்!
மாழ நினைத்தோம்!
மாண்டுவிட முடியவில்லை! விதி
சூழ ஒன்றுபட்டு
சூழ்ச்சிகள் வென்றுவிட வைத்ததுவே!

விதி பெரிதா கண்ணே!
நம் மதி பெரிதா! நம்
மதிநுட்பம் போதாது
என்பதுதான் மெய்யா!
சதி செய்து சாகடிக்க
நினைப்பவர் கைகளில்
கதிஒன்றும் புரியாது
கலிகாலம்தான் பதிலா!

நாளைவரும்!
நம்பிக்கை தரும் கண்ணா! நம்
வேளைவரும்!
நம்பிக்கையுடன் நாம் இருப்போம்!
கோழையல்ல நாம்!
கொண்ட கொள்கை மாறாத
"நாளை விடியும்" என்ற
நம்பிக்கையுண்டு கண்னா!

நதியாகி என்மதிக்கு
புலப்படும் புத்தி இது!
சதிகாரர் அவர்மதிக்கு
சவக்குழி தோண்டும் இது!
புதிராக நாம் சண்டை
பிடித்திடுவோம் அவர் மதிக்கு
புதிராகும்! "என்ன இது!
இவர்களுக்குள் சச்சரவா!

கோழைகளாய்த் தங்களுக்குள்
சச்சரவுச்சண்டைகளா!
வேளையிது! இனிஇவர்கள்
இணைந்திடவே மாட்டார்கள்!
நாளையல்ல! வருகின்ற
காலத்திலும் இணைந்திடார்கள்!
கோழைகளைத் துரத்திடுவோம்!"
என்று நினைத்திடுவார்!

சதியைச்சதியாலே
சாகடிக்கவேண்டும் கண்ணே! அவர்
மதிதன்னை நம்மதி
நோகடிக்கவேண்டும் கண்ணே!
புதிதல்ல இதுவொன்றும்!
"ஊனுக்கு ஊன்" என்ற
மதிநுட்பம் வாய்ந்தவர்கள்
தந்துசென்ற பாடம் கண்ணே!

வேளையிது! ஆரம்பி நாடகத்தை!
அதோவருகிறார்கள்!
நாளையல்ல! இன்றே
விடியல் பிறக்கும் கண்ணே!
மூளையில்லா மூளியர்கள்
முகத்தில் கரிபூச நல்ல
வேளையிது கண்ணே!
ஆரம்பி நம் நாடகத்தை!

நாடகத்தின் ஆரம்பம்!
நல்லதொரு ஆரம்பம்!
மேடைகட்டி ஆடவில்லை!
சிறைக்கூடமதில் ஆரம்பம்!
ஊடறுத்து வந்த புத்தியதன்
வித்திதனில் மதி
ஏடெடுத்துப்படிக்காத
அநுபவத்தின் ஆரம்பம்!

நாடகத்தை பெண்கிளிதான்
தொடக்கியது கச்சிதமாய்!
"வேடம் எல்லாம் தெரிகிறது
மோசக்காரா! என்னை
வேடமிட்டு நடித்து
ஏமாற்றிவிட்டாய்! உன் பொய்
வேடம்எல்லாம் கலைந்து
எனக்கு உண்மை தெரிந்தது!

காடதினில் வாழ்ந்தாலும்
இனியுன்னுடனே நான்வாழேன்!
ஓடதனில் பிச்சையெடுத்தாலும்
உன்னுடன் நான்வாழேன்!
ஓடு! ஓடு! எனைவிட்டு
இனிஓடிவிடு! என்முன்னே நில்லாதே!
ஓடு! ஓடு! எனைவிட்டோடு!" என்ற
அந்தப் பெண்கிளியை

"போடி! போடி! குடிகேடி
உனைப்போய் நான் நம்பி வந்து
நாடிவந்து பட்டதுன்பம் போதுமடி!
இனியுன்னோடு
வாடிவாடி வதங்கியது போதமடி
வாய்காரி! நாதியின்றி உனை
நாடி வந்ததுதான் பாவமடி! போதுமடி
உனைநம்பியது போதுமடி!"

என்றுசொல்லி சண்டைக்கு
வலிந்தழைக்க ஆண்கிளிதான்,
"நன்று! நன்று! இனிநீங்கள்
நாறடித்த நிலைபோதும்! இனி
என்றுமே ஒன்றுபடமாட்டீர்கள்
என்பதுமெய்! நம்வேலை
நன்றாயே முடிந்ததுவே!'
என்றுசொல்லிச் சதிகாரர்

நன்றாய் எகத்தாளமிட்டுச்
சிரித்தபடி சிறை தனைத்திறக்க,
ஒன்றாய்ப் பறந்தனவே!
ஒருமித்து இணைந்தபடி! "நாம்
வென்றோம் கண்மணியே!
காலம் கனிந்து வந்ததுவே!"
என்றதுமே பெண்கிளியும்
"இல்லை இல்லைக்கண்ணாளா!

நன்றாய் வியூகம் வகுத்து
நீ சொன்ன புத்தி
நன்றாய் வேலைசெய்ததுவே!
விதியே கதியென்று
ஒன்றாய் முடங்கிக்
கிடந்திருந்தால் வென்றிருப்போமா!
வென்றோம் உன்மதிநுட்பம்
ஜெயித்ததுவே கண்ணாளா!"

என்று சொல்லிப்பெண்கிளியும்
களிப்புடனே கன்னமதில்
நன்று நல்முத்தங்கள்
பதித்திடவே, ஆண்கிளியும்
"நன்றாய் நீ நடித்தாயடி கள்ளி!
உன் நடிப்புக்கு
என்றும் என்முத்தங்கள்
உன்சொந்தமடி" என்றதுவே!


"விதியே கதியென்று ஒடுங்கிக்கிடந்திட்டால்
மதிக்கங்கு வேலை எங்குண்டு!" என்ற பாடம்
மதிகெட்ட மாந்தர்க்குப் புரிவதில்லை என்றும்
விதிசொல்லித் திரிகின்ற வீணர்க்கு இதுபாடமன்றோ!..

நன்றி
சுபம்.

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3567&hl=

"சமநீதி"

நீதியின் சின்னம் படும்பாடு!நியாய
வாதிகள் தம்மில் படும்பாடு!
பாதியில் இன்னும் பெரும்பாடு!பக்க
வாதிகள் தம்முள் சுடும்காடு!

சாதிகள் தம்முள் சாதிக்கும் உயர்
நீதிகள் எம்முள் போதிக்கும்
நீதியின் இன்னும் இழுபாடு! அதன்
நாதியின் தன்மை குழுமாடு!

நீதிகள் செத்து மடிகிறது!கொடும்
பாவிகள் பித்து எழுகிறது!
நாதிகள் அற்ற தன்மையினால் சிலர்
மேவிடும் சித்துப் பலிக்கிறது!

ஓதிடும் மனங்களில் உண்மைகள் ஓங்கி
ஒலித்திடவேண்டும்! நன்மைகள்
வாதிடும் மனங்களில் உண்மைகள் என்றும்
பலித்திடவேண்டும் திண்மைகள்!

நீதிகள் வேதம் மெய்த்திடவே சாம
பேதங்கள் தண்டம் ஓங்கிடவே
பாவிகள் பாவங்கள் தொலைந்திடவே நீதி
பேதங்கள் தண்டம் பெற்றிடவேண்டும்!

நீதிகள் தம்மை மறப்பவரை புத்தி
ஜீவிகளாக நினைப்பவரை
நாதியில்லா நிலையாக்கிடவே நியாய
சாவிகள் சகிதம் சாத்த வேண்டும்!

நீதிகளாகும் நிலைவேண்டும்! சம
நீதிகள் உலகம் பெறவேண்டும்!
பாவிகள் ஆணவம் மடிந்திடவே நீதி
காவிடும் என்ற நிலைவேண்டும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3713&hl=

"பாட்டுக்கோட்டை"

"பாட்டுக்கொரு கோட்டை அவன்
பட்டுக்கோட்டை!" அவன் பாடல்கள்
காட்டும் கோட்டை! அவன் தேடல்கள்
கூட்டும் இனிய உதயக் கோட்டை!

காட்டுமனங்களையும் பாட்டில்வைப்பான்!
மாட்டும் மனங்களையும் ஏட்டில் வைப்பான்!
கூட்டும்! சுவை கூட்டும்!அவன் பாட்டின் சுவை
காட்டும்! சுகம் காட்டும்! அவன் பாட்டின் கோட்டை!

பாட்டைப் பாடியே அவன் பாட்டைப் பாடியே
நாட்டைப்பிடித்தவர் ஏராளம்! ஏட்டைத்தொடாதவரும்
பாட்டைப்புரிந்து கொள்ளும் பாட்டுக்கள் அவன் பாட்டு!
சாட்டைபிடித்துச் சாத்தும் அவன் பாட்டு! மிருக

வேட்டையாடும் அவன் பாட்டு! கோடு போட்டுச்
சாட்டையோடு நீதி காட்டும்! மனச்சாட்சியோடு
வேட்டையாடும்! சாதிப்பாகுபாட்டை அது ஓட்டும்!
ஓட்டைபோடும் மனங்களோடும் அவன்பாட்டு நன்றாய்

சாட்டைகொண்டு அதுதாக்கும்! ஒன்றாய் நின்று
நாட்டைக்கட்டியது ஆள வழிகாட்டி நின்று ஒளிகூட்டும்!
பாட்டைக்கொண்டு பலர் வேட்கை தீர்த்த அவன் பட்ட
பாட்டையார் அறிவாரோ! பட்டினிச்சாவினில் நாளும்

ஒட்டியுலர்ந்தான் அறிந்தாரோ! அவன்பாடல்
பட்டிதொட்டியெங்கும் நட்டவிருட்ஷமதாய்
ஒட்டியுறவாடியதே! கட்டியங்கூறியதே! ஆனால்
ஒட்டியுலரந்தான்! அவன் ஒட்டியுலரந்த கதையறிந்தாரோ!

திட்டம்போட்டுத் திருடும் கூட்டத்தை அவன்
வட்டம்போட்டுக் காட்டினான்! சட்டம்திருத்தா
வட்டத்தை அவன்பாட்டு வட்டம்திருத்தியதே!
திட்டத்தைக்காட்டியதே! உயர் திட்டத்தைக்காட்டியதே!

சட்டத்தைப் படிக்காத மனங்களைப் படித்த
சட்டவாதியவன்! சட்டாம் பிள்ளை அவன்!
பட்டத்தைப் பெறாத பள்ளிப்படிப்பறியாப் பட்டதாரி அவன்!
திட்டத்தைப் போட்டு தீர்க்கதரிசனத்தைக் கோடுகாட்டியவன்!

"பட்டுக்கோட்டையே! பாட்டுக்கோட்டையே!
இறக்கவில்லையடா நீ! இறந்தவன் நானடா!
பட்டுக்கோட்டை! இனி என்னாய் இருப்பவன் நீயடா!
இறந்தவன் நான்தானடா!" என்றானே கவிகண்ணதாஸன்!

பாட்டுக்கோட்டையே! பட்டுக்கோட்டையே!
நாட்டுப்பற்றாளனே! நீ காட்டியவழியில்தான்
நாட்டில் நல்லவர் வாழ்கிறார்கள்!கிழக்கு
காட்டும் உண்மையிதே!கிழக்கே! நீ வாழியவே!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"பாரதிக்கு ஓர் மடல்!"

"பாரதியே மன்னித்துவிடு!"
என்று ஒர் மடல்
வான்தவழும் காற்றில்
தவழவிட்டேன் அன்று!
"பாரதி நான்களைத்துவிட்டேன்
ஐயா! மற்றோர்பிறவி
நான்வருகின்றேன்
சந்திப்போம்" என்றேன்!

பாரதி! உன்செவிதனுக்கு
வீழ்ந்ததனால்
ஏன்எனை நீ உயிர்
பிழைக்கவைத்தாயோ!
சாரதியாய் மனதொன்றை
இணைத்துவிட்டு
தேன்தமிழில் தவழ்தென்றலதாய்
வருடவைத்தாய்!

பாரதி! வருடங்கள் ஐந்தாகி
பலநூறு அநுபவங்கள்
நான் பெற்றேன்! சந்தம் இசைத்து
செந்தமிழில் சுகம்கண்டேன்!
பாரதியுன் எண்ணங்கள்
வண்ணங்களாகி என்சிந்தைக்குள்
தேன்தமிழாய் இனித்திருக்க
பனித்திருக்கும் இனிமை சுகம்கண்டேன்!

பாரதி! நீ பா ரதி!
பார்த்தசாரதி அவன் காதலி நீ!
வான்சுடர் நீ! தேன்தமிழ் நீ!
நான் விரும்பும் தேன்சுவை நீ!
பாரதில் பார்புகழ் பாரதிநீ!
தேரதில் பவனிவரும் தேன்கனி நீ!
வான்சுடர் உள்ளவரை நீயிருப்பாய்!
எங்கும் நீ நிறைந்திருப்பாய்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3830&hl=

"நம்பெருமை"

"பாசம்" பார்முழுதும் படர்ந்திருக்க
"பாசம்" தன்னின் படர் நிலைதெரியாது
"பாசம் நமக்குமட்டும் சொந்தம்! தேசப்
"பாசம்" என்றுமே நம் சொந்தம்!" என்று .

தேசம் விட்டு பிற தேசம் வரும்வரை
"பாசம்" பற்றிய கருத்தை நானும் கொண்டதுண்டு!
தேசம் விட்டு பிற தேசம் வந்த பின்பு
"பாசம்" பற்றிய கருத்தில் மாற்றம் கண்டதுண்டு!

நேசம்கொண்ட மனங்கள் தம்மை நிற
பேதம்தாண்டிப் பார்த்திருந்தேன் இன்று!
வாசம்மிக்க பாசம் கொண்ட மனித
நேசம்கொண்ட மனங்கள் பார்த்தேன் இன்று!

"நேசம்" கொண்ட "மனித நேயம்" தன்னை பல
தேசம் தன்னில் பார்த்தேன் இன்று! நம்மில்
நாசம்கொண்ட நம்மவர்கள் சிலர் நம்
தேசம்தாண்டி வந்து செய் சேட்டைகளால்...

தேசம்விட்டுத் தேசம் தாண்டிவந்து
நாசம் செய்யும் சில கூட்டங்களால்...
நேசம்பற்றிச் சந்தேகம் மேலைத்
தேசங்களைப் பாதித்திருந்ததனால்...

நேசம்கொண்ட மேலை இனங்கள்கூட
நாசக்காரர்போல நமைப் பார்த்ததுண்டு!
பாசம்கொண்ட மேலை மனங்கள் சில
நேசக்கணைகளாலே நமைத் துளைத்ததுண்டு!

"தேசம்விட்டு தேசம் வந்து உங்கள்
நாசக் கேட்டை நாம் பார்த்தபின்பு
பாசம்வைக்கப் பயமாயிருக்கு!" என்று மேலைத்
தேசர் நம்மைக் கேட்பதுண்டு! அவர்தம்

பாசம் கொண்ட மக்கள் தம்மை
நாசம் செய்யும் நம் சிலர் செய்கையாலே
பாசம்வைக்கப் பயம்தான் கொண்ட மேலை
நேசம்கொண்ட மனங்கள் கூற்று அது!

வேசம்எல்லாம் கலைந்த பின்பு மனித
நேசம் எல்லாம் தொலைத்தபின்பு பிற
தேசம்மீது குறைகள்சொல்ல மேலைத்
தேசப்பாசம்மீது கறைகள் சொல்ல....

பாசம்கொண்ட மனங்கள்போல நடிக்கும்
வேசம்கொண்ட சிலர் தமக்குள் தம்தம்
தேசம்மீது பற்று என்று பிதற்றும்
கோசம்செய்யும் நிலைதான் ஏதோ!!

பாசம் இருக்கும் மனங்கள்கூட
பாசம்தனுக்காய்ப் தினமும் பார்த்திருக்க
நாசம் கொண்ட மனங்கள்தம்மில் நாம்
பாசம் கொண்டு அலைநிலைதான் ஏனோ!

பாசம் சக்தி இழந்திடாதா! அவர்
வேசம் புத்தி அறிந்திடாதா!
நாசம் செய்யும் மனக்களைகள் நீக்கி
நேசம் பாசம்தனை நாம் வளர்ப்பதற்கு....

தேசம்விட்டுத் தேசம் வந்த
தேசத்திலும் நாம் பாசம்வைத்து
பாசம் காட்டிப்பழகும் போதும் நம்
தேசப்பற்றும் கூடும்! கூடும்!

"பாசம்" நிறபேதம் தாண்டி நம் இதயம்
பாசப்பார்வை பார்க்கும் பார்வைக்குள்ளே
நேசம்காட்டி நாமும் பார்த்தால் போதும்!மேலைத்
தேசம்கூட நம் பாசப் பெருமைகூறும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3849&hl=

"குருட்டுக்கண்களைத் திறந்துபார்!"

திருட்டுக்கள் பல
ரகம்!
இருட்டுக்குள்
நடக்கின்ற
திருட்டுக்கள் பல
ரகம்!
மருட்டும் விழிக்குள்
திருட்டுக்கள் பல
ரகம்!
சுருட்டும் கவிதைத்
திருட்டுக்கள் பல
ரகம்!
இருட்டுக்குள் மட்டுமல்ல...

குருட்டு மனங்கள்
பட்டப்பகலுக்குள்
உருட்டு விழிகள்
திருட்டுவழிகள்
ஓர்
பொருட்டும்
பயமின்றித்
திருட்டுநிலைகள்
சுருட்டும்
கதைகள் சூழும்
நிலைகள்
அது
தொடர்கதைகள்!

குருட்டு
உலகம்தான்!
குருட்டு
மனங்கள்தான்!
திருட்டும்
புரட்டும்
தெரிந்து
மனங்கள்தாம்!
திருட்டும்
புரட்டும்
அறிந்து கொண்டு
சுருட்டும்
உலகைத் திருத்தவேண்டும்!

வெருட்டும்
வழிகள் கண்டு
திருட்டுக்கும்பல்
சுருட்டும்
நிலைகள் கண்டு
அதை
அழிக்கும் பொருட்டு
குருட்டு விழிகள்
விழிக்க
வேண்டும்!
அந்தத்
திருட்டுக் கும்பலை
அழிக்க வேண்டும்!

உன்
குருட்டுக்கண்களைத்
திறந்துபார்!
சுருட்டும்
மனங்களை
அறிந்துபார்!
சில
மருட்டும்
விழிக்குள்ளும் கலைத்
திருட்டு
இருக்கு!
உன்
குருட்டுக்கண்களைத் திறந்துபார்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

சனி, 6 ஜூன், 2009

"அழகு" "பழகு"



சத்தம் இல்லாத தென்றல் அழகு!
புத்தம் புதிதாக மலர்வது அழகு!
நித்தம் சொல்லாத மனமன்றம் அழகா!கடல்
முத்தம் கொள்ளாத தினக்கதிர்கள் அழகா!

புத்தம் புதிதான புலர் காலை அழகு!
சித்தம் குளிர்கின்ற சிந்தை அழகு!
அர்த்தம் இல்லாத கவிதை அழகா!மடல்
அர்த்தம் சொல்லாத காதல் அழகா!

எத்தர் இல்லாத உலகம் அழகு!
பித்தர் சொல்லாத கவசம் அழகு!
அத்தர் இல்லாத மலர்கள் அழகா!இதய
சுத்தர் இல்லாத சதைகள் அழகா!

நித்தம் இடுகின்ற முத்தம் அழகு!
சத்தம் இடுகின்ற அலைகள் அழகு!
அர்த்தம் இல்லாத சக்தி அழகா!உடல்
அர்த்தம் இல்லாத புத்தி அழகா!

"பத்தும் பதினாறும்" பெறுவது அழகு!
"பத்தும் பறந்தோடும்" என்பது அழகு!
நித்தம் சலிக்கின்ற முத்தம் அழகா!உடல்
பித்தம் தலைக்கேறும் சத்தம் அழகா!

கத்தல் இல்லாத கவிதை அழகு!
சுத்தல் இல்லாத கதைகள் அழகு!
முத்தல் இல்லாத கனிகள் அழகா!மனம்
முத்தல் இல்லாத முனிகள் அழகா!

புத்தன் சொல்கின்ற அன்பு அழகு!
பக்தன் சொல்கின்ற பரசமயம் அழகு!
பித்தன் சொல்கின்ற வம்பு அழகா!சதைப்
பக்தன் சொல்கின்ற சமரசங்கள் அழகா!

அர்த்தம் தெரிகின்ற ஊடல் அழகு!
அர்த்தம் தெரிகின்ற தேடல் அழகு!
அர்த்தம் தெரியாத ஆடல் அழகா!காதல்
அர்த்தம் தெரியாத கூடல் அழகா!

"புத்தம் புதுப்பூமி" என்பது அழகு!
நித்தம் நதிபோலப்பாய்வது அழகு!
"நித்தம் மதுவேண்டும"; என்பது அழகா!நீ
"நித்தம் நிதிவேண்டும்" என்பது அழகா!

"நித்தம் எதுஅழகு!" என்பது அறிந்து
"நித்தம் எதுவேண்டும்" என்பது தெரிந்து
சித்தம் குளிர்ந்து நீ வாழப்பழகு!மதிப்
பித்தம் தெளிந்து நீ வாழப்பழகு!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"புதுமைப்பெண்ணாள்!'

பாரதிகண்ட புதுமைப்பெண்!
யாரதில் புதுமைகொண்டார்கள்!
பாரதில் பாரதி சொன்னதன் அர்த்தம்
பாரதில் சில மாதர்கள் கொள்வதன் அர்த்தம்

பாரதில் புதுமைதான்!கவிமேதை
பாரதி பார்த்திட்டால் காறி உமிழ்வுதான்!
பாரதி கண்டது வேறுதான் சிலமாதர்கள்
பாரதில் கொண்டது வேறுதான்!

வேரதைப்பிடுங்கவா சொன்னான்!களை
வேரதைப்பிடுங்கவே சொன்னான்!அதன்
சார்பதை புரிந்திடா மாதர்கள் சிலர்
வேர்களைப்பிடுங்கி எறிவதைப்பாரீர்!

யார் அதன் காரணம்! பார் அதன் காரணம்!
நேர் அதன் தோரணம்! பார் அதன் பா ரணம்!
சேர் அதன் சீதனம்! சார் அதன் வேதனம்!
பார் அதன் பாமனம்! வேர் அதன் பூமணம்!

பார்புகழ் அன்னை திரேசா!
பார்புகழ் கண்ட திரேசா!அவள்
பார்மனம் கொண்ட அன்பால்
பார்மணம் கண்ட இன்பால்!

பாரதிகண்ட பெண்ணாள்!அவள்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாள்!தன்
பேர் அபிமானங்கொண்டு தன்
பேர் அதைக் கெடுத்தாள் இல்லை!

யார் அவள் பண்பைப் பெற்றார்!
யார் அவள் தண்டம் பெற்றார்!
தேர் அவள் ஏறிவரத் தன்னைப்
பேர் அவள் கூறி விற்றாளா!இல்லை!

சார்பிலா சமயம் போற்ற
சேர்நிலா மனங்கள் ஏற்ற
பார்நிலா கண்ட பெண்ணாள்!அவள்
பார்நிலா பாரதி கண்ட புதுமைப்பெண்ணாள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3877&pid=48099&mode=threaded&start=#entry48099

"நீதி"

எரிந்த வீட்டில் பிடுங்கியது மிச்சமாய்
எரிந்த வயிறுகள் சாபமாய் சுனாமியால்
சரிந்த மக்களின் துயர்துடைப்பு நிதிவரவில்
வரிந்த மாக்களின் கயமைத்தனம் தெரிந்ததே!

பிரிந்த உறவுகள் அவலங்கள் ஒருபுறம்!
சரிந்த மனங்களின் ஏக்கங்கள் ஓருபுறம்!
சரிந்த மனங்களின் சாவினை எதிர்பார்த்து
"விரிந்து மறுமுறை சுனாமி வராதா!" என்கின்ற

உறிஞ்சும் வர்க்க ஓநாய்கள் ஒருபுறம்!
புழிஞ்சு இரத்தத்தை உறிஞ்சும் எண்ணங்கள்
அறிஞ்சும் அறியாமல் கண்மூடித்தனங்களாகி
தெரிஞ்சும் தெரியாமல் மண்மூடும் மனங்களேனோ!

எரிஞ்ச வயிறுகள் சாபம் இவர்களை
உறிஞ்சிக்கொல்லும்! உயிர்கொல்லிபோலே
எரிஞ்சுகொல்லும்! ஏழைகள் மனம்நொந்து
எரிஞ்சு வீழும்கண்ணீர் கூரியவாளைப்போல்

அரிஞ்சு வீழ்த்தும்! ஆழ்கடல் சத்தத்தில்
தெரிஞ்சு செய்யும் மூழ்கடல் மனங்கள்
எரிஞ்சு சாம்பலாகும்! வாழ்கடல் வாழ்க்கை நியதி
அறிஞ்சு சொல்லும் சேதி தெரிஞ்சு சொல்லும் நீதி இது!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"பாலன் பிறந்திட்ட நன்னாள்!"

மார்கழி மாதம்! மண்ணில்
வேர்களின் ஈரம்!மண்ணில்
சேர்கதிர் ஒளியாய் மைந்தன்
மார்கழி தளிராய்ப் பிறந்திட்ட திருநாள்!

கார் இருள் அகற்றி புவி
சேர் அருள் நிறைக்க
பார் புகழ் மைந்தன்
பார் உதித்திட்ட திருநாள்!

நேர் கொண்ட பார்வை
சீர் கொண்ட கோர்வை
தேர்கொண்ட அன்பால்
பார்கண்ட பாலன் பிறந்திட்டத்திருநாள்!

சோர்வுள்ள மனங்கள்
சோர்வினை நீக்கி புவி
சேர்கின்ற "அன்பே ஜெயம்" என்று விளங்க
பேர்சொல்லும் அன்பன் உதித்திட்ட திருநாள்!

சீர்கொண்டு வாழ்த்துக்கள்! நிலா
சேர்கொண்ட நெஞ்சங்கள் அன்பு
வேர்கொண்ட நீர்போல் உலா
பேர்கொண்டு புகழ்பெற வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

1-1-2006 "வருக! தருகவே!"

அருள் தரும் ஆதித்தன்!அவன்
இருள் தனை நீக்கியே அன்பு
பொருள் தனை உணர்த்திடும்
அருள் ஒளித்தீபம் ஏற்றியே

வரும் நிலை நோக்கியே வரம்
தரும் நிலை சேர்த்திட அறம்
தரும் சுகம் சாற்றியே அவன்
அரும் அருள் போற்றிட வரும்

பொருள் நிறை மகிழ்வுடன் வரும்
அருள் நிறை புதுவருடமே!உன்
பொருள் நிறை வருகையால் உலக
இருள் நிலை தானும் அருகவே!

"வரும் வாழ்வில் வசந்தமே!" எனும்
அரும் பொருள் இதயம் நிறையவே
வரும் புது வருடமே! நீ தரும் இனிமைசுகந்தமே!
அரும் மது தரும் இரசமென அகிலம் மகிழ்வினில் மலர்கவே!

அருள் நிறை அருணனே!உன்
அருள் நிறை பார்வையால் அகிலம்
பொருள் நிறை புகழுடன் மனங்கள் மலர்மணம் பரப்பவே
அருள் நிறை ஒளிர்கவே! தினங்கள் தினம் தினம் மலர்கவே!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

அனைவர்க்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு
இதயம் நிறை வாழ்த்துக்கள்!

"பதிலாகும் மதி!"

மதியோடு தண்மதி சேர்க்கும் தனிமதியே!என்
மதியோடு தண்மதி சேர்க்கும் ஓர் ஆதங்கம்!
மதிநாடும் மதிமுற்றமதில் தனிமதியே!என்
மதிநாடும் மதிசுற்றிவரும் கவிமதிகளைத்தந்துவிடு!

சுதியோடும் இரசனையுள்ள அனைவருமே நல்
மதியோடும் இரசனையின் வண்ணங்களை நல்
மதியோடும் கவியாக்கித் தரமுடியும்! உன்
மதியோடும் கவியாக்கும் வண்ணமிது!என்

மதியோடும் நடைபோடுவது என் கிறுக்கல்கள்!அது
சுதியோடும் நடைபோடுவது என் இரசனைக்குள்!மது
மதியோடும் விடைகூடுவது உன் இரசனைக்குள்!உன்
மதியோடும் விடைதேடுவது உன் கிறுக்கல்களே!

நதியோடும் தென்றலோடு மதிதேடும் மாணவன்!இவன்
விதியோடும் முன்றலோடு விளையாடுவான்!நல்
மதியோடும் திங்களோடும் விடைதேடுவான்!சொல்
மதியோடும் பொங்கலோடும் நடைபோடுவான்!இவன்

மதியறியாப் பள்ளி மாணவன்தான்! கல்வி
மதியறியாப் புள்ளியில்லா மாணவன்தான்!இவன்
மதியறியாப் பாடங்கள் ஏராளம்!தன் தனி
மதியறியாப் பாடங்கள் தாராளம்!இவன்

சதியறியாப் பிள்ளையாய் பிறந்துவிட்டான்!தன்
மதியறியாப் பிள்ளையாய் வளர்ந்துவிட்டான்!
சுதியறியா மனங்களின் மத்தியிலே தன்
மதியறியா நற்தினங்களை செலவுசெய்தான்!

கதியறியாப் பிள்ளையாய் கதறுகையில்
கதியறிந்து கைகொடுத்த தெய்வமதாய்
சுதியறிந்த கண்ணனவன் தாஸனவன் தன்
மதியறிந்த எண்ணங்களால் வடம்பிடித்தான்!

நதியறியாப் பிள்ளையிவன் கைபிடித்து "வாழ்க்கை
விதிவழியே பயணம்" என்று தெரியவைத்து
"மதியறியாப் பிள்ளை என்று யாருமில்லை!உன்
மதிவழியே பயணமதாய் நானிருப்பேன்" என்று

நதிதவழும் தமிழ்க்கடலின் முத்துதனை என்
மதிவருடி அமிழ்தினிதாய் கோர்த்தெடுத்து
சுதிதவழும் தென்றலதாய் வருடவைத்தான்!என்
மதிவருடும் கண்ணனுக்குத் தாஸனவன்!

"நதிவழி விதிவழி பயணங்கள்! நம் கோலம்
மதிவழி முயற்சிவழி முடியும் என்ற நம்பிக்கைவழி
விதியோடும் வழியோடு நடைபோடு! காலம்
நதியோடும்! வழிகூடும் விடைதேடும்! நம்பிக்கைப்படி!"என்று

மதியோடு விடைதேட கால நதியோடுகிறது!
மதியோடு கவிதை நடை போடுகிறது! காலம்
சுதியோடு விளையாடி கரைந்தோடுகிறது!ஞாலம்
சுதியோடு கவி தையோடு நிறைந்தாடுகிறது!

நதிதேடும் படலமிது! நடைபோடும் உடலமது!
விதிதேடும் காலம்வரை விடைகூறும் பயணமிது!தன்
மதியோடும் விளையாடும் வான்சுடர்தாஸன் பயணமிது!
"கதியோடும் கலங்காதே!" என்ற செங்கதிரோனின் உடலமிது!

கதிரோடு வந்தது! கதிரோடு கலக்கட்டும்!
சதிராடும் சந்தங்கள் சுதிவிலகாது பிறக்கட்டும்!
பதிலாகும் சொந்தங்கள் பதினாறும் பெற்றிடட்டும்!
பதிலாகும் புவி வந்தது! நற்பதிலாகும் கவிதந்தது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
19-12-2005

"மாங்கனி!"

மாங்கனியே!
உனக்காக ஓர் கவிதை!
மாங்கனியே! நீ
எனக்காகத் தேன்தமிழில்
தாங்கிவரும்
உனக்காக ஓர் கவிதை!உயிர்
தாங்கிவரும் தேன் நீ!
உனக்காக ஓர்கவிதை!

"மாங்கனி நீ!' என்றதும்
"முக்கனியில் நீ
மாங்கனி"யாய் என்பதொன்று!
முத்தமிழில் நீ
தாங்கிவரும் தேன்தமிழ்க்
காவியமாய் கவி
தாங்கிவரும் வான்சுடர்க்
கவியரசன் "மாங்கனி" என்பதொன்று!

மாங்கனி! தேமாங்கனி!
புவிமாங்கனி தந்த தேன்
மாங்கனி நீ! தேன்
சுவையாகி தேனிதழூறும் தேன்
தாங்கிவரும் மாங்கனி நீ!
மாங்கனிகளுள் முன்
தாங்கிவரும் "முதற்கனி" நீ!
முக்கனிகளில் "முதல்வன்"நீ!

மாங்கனி உனைநினைத்தால்
வாயூறும்! வாய்நறு
மாங்கனி! உன் மணம் நுகர்மனம்
மகிழ்வூறும்!உனைத்
தாங்கிவரும் ஊர் அழகு!
உலகழகு! உன் பேர்
தாங்கிவரும் தமிழ் அழகு! உன்
தளிர் பேரழகு!

மாங்கனி நீ! சேராத பஞ்சகமா!
முதல் மஞ்சத்துள்
மாங்கனி நீ சாராத மஞ்சமா!
நெஞ்சத்துள் கவிபஞ்சமா!
தாங்கிவரும் பாடல்களில்
தழுவிவரும் உனைத்
தாங்கிவரும் தேடல்களில்
ஏங்கிவிடும் மனங்கள்தான் கொஞ்சமா!

"மாங்கனி" நீ! காவியநாயகன்
கண்ணதாஸன் அவன்
"மாங்கனி" நீ! காவியமாய்
சிறைக்கூடமதில் கவி
தாங்கிஅரும் மாங்கனியாய்
ஆறுமணிகளுக்குள்
தாங்கிஅரும் தங்கமானாய்
"தங்கம்" ஆனாய்!

"மாங்கனி" நீ! அவன்
கவிநயத்துள் தேன்
மாங்கனி நீ! தமிழ்த்
தேன்சுமந்த நயம்!மது
தாங்கிஅருந் தமிழுக்குள்
தழுவிவந்து உயிர்
தாங்கிஅருந் தேன்தமிழாய்
தென்றலாய் வருடியதே!

மாங்கனி! உனைப்பாட
மாங்கனித்தமிழுக்குள் ஒருமா
மாங்கம் போதாது! மறுபிறவி
பிறப்பெடுத்து நான் உன்
பாங்கினைப் பாட வேண்டும்!
உனைத்தழுவி தெம்
மாங்கினில் பாடவேண்டும்!
எனைத்தழுவும் நீ வாழ்க!

உன் புகழ் வாழ்க! உலகுள்ளளவும்
உன் பேர் வாழ்க! அள்ள அள்ளக்குறையாத
உன் சுவை வாழ்க! தமிழ் உள்ளவரை
உன் பேர் வாழ்க! மாங்கனியே! நீ வாழ்க!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"எனக்கும் உனக்கும்"

எனக்கும் உனக்கும்
கணக்கு வழக்கு!
நினைக்கும் பொழுது
சிரிப்பு வருகுது!

கனக்கும் இதயம்
கணக்கு வழக்கில்
எனக்குள் உதயம்
உதித்து வருகுது!

"தனக்குத் தனக்கு" என்ற
உரிமைக் கணக்கில்
மனத்துள் தனக்குள் ஒன்றாய்
கனக்கும் வழக்கில்

எனக்குள் வழக்கு ஒன்றின்
தீர்ப்புத் தெரிய என்
மனத்துள் நினைத்துப்பார்த்தேன்!
எனக்குச் சிரிப்பு வருகுது!

தினத்துள் தினம் இன்று
வருடக்கணக்கில் ஒன்று
மனத்துள் கனத்துக் கொண்டு
மறையப் போகிறது!

வனத்துள் நிறைக்கும் ஒன்று
"மனத்தில் விலக்கு" என்று
தினத்துள் தினமாய் இன்று
உருளப் போகிறது!

எனக்குள் இருக்கும் உனக்குள்
என்னைத் தெளியவைத்து
உனக்குள் இருக்கும் வழக்குள்
என்னைப்புரிய வைத்து

கனக்கும் மனத்துள் களிப்பைக்
கண்டு இரசிக்க வைத்து
எனக்கும் மனத்துள் வெளிப்பைத்
தந்து உரசிச் செல்லும்

எனக்குள் இருக்கும் உன்னை
நினைத்துப் பார்த்தேன்!என்
மனத்துள் இருக்கும் என்னை
நிறுத்துப் பார்த்தேன்!

எனக்குள் இருந்த வழக்கு
எனக்குள் கிழக்கைக்காட்ட
மனத்துள் வருத்தம் தீர்ந்து
புதுப்பொலிவை எனக்குள் பார்த்தேன்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"பெண்ணின் பெருமை!"

கண்ணில் தெரிகின்ற
கவிதையே!மனக்
கண்ணில் தெரிகின்ற
கவிதையே!தினக்
கண்ணில் தெரிகின்ற
கவிதைகள் மனக்
கண்ணில் தெரிகின்ற
கவிதையுன் கவிதையே!

பெண்ணில் இருக்கின்ற
உணர்வுகள் இதயப்
பெண்ணே! உனக்குள்ளும்
கனவுகள்!உதயக்
கண்ணில் இருக்கின்ற
காந்த சக்திக்குள் இதயப்
பெண்ணே! எனக்குள்ளும்
நீந்தும் உணர்வுகள்!

எண்ணில் இனிமைகள்!
எழுதும் பொழுதில் புதுமைகள்!
மண்ணில் இனிமைகள்!
மலரும் பொழுதின் மகிமைகள்!
கண்ணில் தெரிந்திட
கவிதை மலரும் உணர்வுகள்!
எண்ணில் புரிந்திடும்!
புவித்தை மகளின் புதுமைகள்!

பெண்ணில் இணைந்திடும்!
பெண்ணின் பெருமை உணர்த்திடும்!
மண்ணின் பொறுமையை மனது
எண்ணி மகிழ்ந்திடும்!
விண்ணில் நிலவினை
பெண்ணுக் குவமையாக்கிடும்!
மண்ணின் நிலவினாய்
பெண்ணின் தண்மை உணர்த்திடும்!

கண்ணில் கருணையாய்
கனிவு கூட்டும் பெருமையாய்
மண்ணில் அன்னையாய்
இனிமை காட்டும் தன்மையாய்
பெண்ணில் பெருமைகள்
மண்ணில் புதுமை கூட்டிடும் புவிப்
பெண்ணில் அருமைகள் மனக்
கண்ணில் இனிக்குதே!

கண்ணில் காதலைக்
கருத்தில் இனிய மோதலை
கண்ணில் கவிதையாய்
களிப்பில் இனிக்கும் மாதினை
விண்ணில் விழிச்சுடர்
வான்சுடரின் ஒளிர்வினை இதயம்
விண்ணில் வழித்தொடர்
வான்மதியாய் வடிக்குதே!

கண்ணில் தோன்றிடும்
கவிப்பெண்ணே! கவிதையே!உனை
மண்ணில் பாடவே "மாங்கனி"
கவிப்பெண்ணாய் இனிக்குதே! செம்
மண்ணில் நீரைப்போல்
செந்தமிழின் சுவையைப்போல்
பண்ணில் பாடலாய்ப்
பைந்தமிழ்த் தேன்மொழியாய்ப் பெருகுதே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"நல்வரவு!'


அருணனின் பார்வையில்
அகிலத்தின் உயிர்ப்பு!
அருணனின் போர்வையில்
அகில்மனங்கள் இலயிப்பு!

தருணம் இதுவென்று
தழுவிவரும் தென்றல்
தருணம் பார்த்திருந்த
உழவனவன் நெஞ்சில்

வருணன் பொழிந்ததுபோல்
வருங்காலம் சிறக்குமென்று
அருணன் ஒளிக்கதிரில்
அகம்மகிழ் திருநாள் இன்று!

அருணன் அவன்தனுக்கு
அழகுறவே பொங்கலிட்டு
அருணன் அவன்மகிழ
அழகுமலர் தைமலர்ந்தாள் இன்று!

அருணன் அவன்வரவு
அகிலத்தில் நல்வரவுபெற
அருணன் அவன்தனைப்போற்றி
அகில் மணமாய் நாம் நலம்பெறுவோம்!

அருகிடட்டும் துன்பங்கள்!
பருகிடட்டும் இன்பங்கள்
பெருகிடட்டும் நல்மனங்கள்!
உருகிடட்டும் கல்மனங்கள்!

மருவிடட்டும் தென்றலதாய்!
வருடிடட்டும் திங்களதாய்!அகிலம்
உயிர்பெறட்டும்! அன்பில்
உயிர்கள் ஒளிபெறட்டும்!

அனைவர்க்கும் இதயம் கனிந்த
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

வெள்ளி, 5 ஜூன், 2009

"அருமை மகளே!"


கருவினில் உனைச்சுமந்தேன்!
உருவினில் எனைவடித்தாய்!இனிய
கருவுக்குள் கனவுகள் சுமந்து
திருவுக்குள் திருவாய் நினைத்தேன்!

பெருமைக்குள் பெருமை சொல்லும்
பேருவகைக்குள் பெண்ணாய் மலர்ந்தாய்!
அருமைக்குள் அருமையாக இனிமை
அருமைக்குள் மருவும் பெண்ணே!

கருவினில் உனைச்சுமந்த உன்
அருமைத் தாயின் கண்ணீர் மடல் இது!
பெருமைகள் சொல்லும் பெண்ணே!
கருமைகள் தோய்ந்த கண்ணீர்க்

கருமணிக்கடிதம் கண்டேன்!உனைக்
கருவினில் சுமந்தபோத வளர்த்திட்ட
அருமைக்கனவுகள் கலைந்திட்ட உன்
கருமையில் கண்ணீர்க் கடிதம் கண்டேன்!

"அருமையாய் வாழ்வாய்" என்றே
அன்றுனை மணம்முடித்துக்கொடுத்து
"பெருமைகள் சொல்வாய்" என்று
அன்றுநான் மனம்மகிழ்ந்தேன்!

கருமைகள் கரைந்து கண்ணீர்
இன்றுஉன் மடல்பார்த்ததிலிருந்து
கருவினில் சுமந்தகாலம் "கனவுகள்"
என்று கண்டேன்! கவிதைநீ கதிகலங்கி

கருத்தினில் மாற்றங்காணும்
உருக்குலைத்தன்மை கண்டேன்!
கருத்தினில் தெளிவு காண்பாய்!வாழ்வுக்
கருக்குலைவுக்கு வழிநீ நாடாய்!

வருத்திடும் வாழ்க்கை மாறும்!
வருத்திட நினைக்கும் மிருகம்
உருத்தெரியாமல் மாறும்! உன்னை
வருத்திடும் நிலைதான் மாறும்!

பொறுத்திரு! பூமியாள்வாய்!
வெறுத்திடும் நிலைதான் மாறும்!
நிறுத்திடு நெஞ்சில் நீதான்!
வெறுத்திடும் நிலையை மாற்ற

பொறுத்திரு மகளே! நீயும்
பொறுத்திடும் பலனும் கிட்டும்!
கருத்திடும் வானும் விலக
வருத்திடும் நிலையும் மாறும்!

"எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று வாழ்வைக்
கெடுத்தோர் பட்டியலில் நிலை
"கெடுத்தாய் நீயும்"என்ற பெயரும்
எடுத்திடா நிலை நீ உணர்வாய்!

அடுத்தவர் பலரும் சொல்வார்!
கெடுத்திட முனைந்து நிற்பார்!
விடுப்பதாய் உனது வாழ்வை
கெடுத்திடக் கனல் மூட்டிடுவார்!

விடுப்பினை கேட்கும் கயவர்
கெடுப்பினை அறிந்து நீயும்
துடுப்பெடுத்திடாதே பெண்ணே! வாழ்வைக்
கெடுத்திடாதை என் கண்ணே!

சோதனை யாவும் ஒன்றாய்
வேதனை சேர்க்கும் நேரம்
மாதுனை மயங்கச்செய்யும் மதி
வேதனை தீர்த்திடாது! மயக்கந்தான் நீயும் தெளி!

சோதனை யார்க்கு இல்லை!
வேதனை தீர்க்கும் வழிகள்
சாதனை காட்டும் நெறிகள்
மாதுனைத் தேற்றும்! மறுமலர்ச்சியை உண்டுபண்ணும்!

போதனை தாயின் அநுபவம் கண்ணே!
வேதனை தீர்த்துவிடு! விடியலும் கண்முன்னாலே!
சோதனை சூழும் போது மனம்
போதனை "பொய்வேதம்" என்னும்!

காதிலே போட்டுக்கொள்! காதலை வளர்த்துக்கொள்!
மாதுநீ நினைத்தால் நன்மை கூடிடும்! வாழ்க்கை
காதலாய்க்கனிந்து கவிதையாய் துலங்கவைக்கும்!
ஏது! நீ கவலைவேண்டாம்! கருத்தினில் தெளிவு காண்பாய்!

"அடிமை"யென்னும் "ஆண்டாள்" என்னும்
அடிமைவிலங்குகள் அறுந்துபோகும் என்றும்
அடிமைதான் அன்புக்கன்றி அதிகாரத்துக்கல்ல கண்ணே!
அடிமையாய் அன்புள் அடங்கி அறநெறி தளைக்க வாழ்வாய்!

கடிதென எதுவுமில்லை! காலம் நல்பதில்தான்சொல்லும்!
கடிதென இருப்பதெல்லாம் இலகுவாய் மாறும் மனந்தான்
கடிந்திடும் நிலை மறந்தால் கனிவோடு தெளிவுகண்டால்
கடிந்திடும் கவலை தீரும்! கருணையே உன்னைவெல்லும்!

கவலைகள் வேண்டாம் பெண்ணே!
கடவுள்தான் துணையாய் நிற்பார்!
அபலையாய் யாரும் இல்லை!
நடந்துவா! கவலை தீரும்! நிம்மதி உனக்குள் வாழும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"தென்றல் நீதான்!"

தென்றலாய் எனைத்தாலாட்டி இதய
மன்றத்தில் இடம் பிடித்தவளே!
நன்றடி! நன்று! அன்றும் இன்றும்
தென்றலாய் நினைவுகளாய் என்றும் நீ!

மன்றெலாம் மகுடம் தந்தாலும் உன்
மன்றத்தில் நீ தந்த மகுடம் அது
நன்றடி! நன்று! செந்தமிழாலே குளிரவைத்து
மன்றெலாம் வலம்வரும் சுகம்தந்தாயே!

இன்றெலாம் நினைக்கும் பொழுது!
ஒன்றோடு ஒன்றாகி உன்னோடு நன்றாகி
என்றுமே மறக்காத இளந்தென்றலாய் நீ தந்த
மன்று! மறந்திட முடியாத ஒன்று!

அன்றெலாம் உன்னை சிந்தையில் நிறுத்தி
"வென்றுவா தமிழே! நீ வென்றுவா!" என்பதே
நன்றென மந்திரம் நாளும் நான் உச்சரிக்க
நன்று நீ சொன்னாயே! நன்றியடி கண்ணே!

கொன்றெலாம் துயர்கள் வாட்டிடும்போதும்
"சென்றுவா மகனே! வென்றுவா" என்று
சென்றவிடமெல்லாம் தென்றலாய் இணைந்து
நன்று வென்றிடவைத்தாயே! நன்றி வென்றதடி கண்ணே!

தென்றலாய் வந்தாய்!தேன்மொழியினைக்கலந்தாய்
அன்றலர்ந்த மலராய் அழகுற நிறைந்தாய்!
இன்றென நினைத்தால் நினைவுகள் இனிமை!
நன்று! நன்று ! உன்வரவு உன்நினைவு நன்றடி! நன்று!

மன்றெலாம் நீ! இதய மன்றதனில் என்றும் நீ!
சென்றெல்லா மனங்களையும் குளிரவைக்கும் திங்கள் நீ!
நின்றாலும் இருந்தாலும் நடந்தாலும் நிம்மதி
மன்று அதாய் என்றும் நீதான்! தென்றல் நீதான்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4118&pid=57298&mode=threaded&start=#entry57298

"வருக! வாழ்க!"


தினம் தினம் சுபதினம்!
மனத்தினில் காதலுக்காய்த்
தினம் தினம் சுபதினம்! இதில்
தினத்தினில் வருடமதில்

தினம் ஒன்று காதலர்க்கா!இல்லையில்லை!
"மனத்தினில் ஒன்றாய் இணைந்தவர்க்காய்
தினம் ஒன்றைத்தேர்ந்தெடுத்து உலகம்
மனத்தினில் இணைத்திடவே 'காதலர்

தினம்' என்ற ஒன்று" என்று நாம்
மனத்தினில் இணைப்பதுதான் நன்று!
வனம் தன்னில் நின்றாலும் கணம்
மனத்தினில் இணைந்துசுகம் நிதம்

மனம் காண்பதே காதலர்தம் சுபதினம்!
மனத்தினில் இனம் மதம் மொழிபேதம் கடந்து
மனம் கனத்திடும் நிலைகளை போக்கி
தினம் தினம் இனிமைசுகங்களை வரவுவைத்து

மனம் ஒன்று திரண்டு வரும்
தினங்களில் துயர்கள் துடைக்க
தினம் தினம் இணைந்து போராடும்
மனங்களை வரவுவைக்கும் காதலர்தினங்கள்!

வாழ்க! வாழ்க! வளமுடன் என்றும்
வாழ்க! வருக! வளமுடன் என்றும்
சூழ்க! சுகங்கள் பலதருக! உலகம்
சூழ்க! சூழ்ந்து வாழ்த்திட காதலர்தினங்கள் வருக!வாழ்க!

நன்றி
சுபம்!
அன்புடன்

"உன்னுடன்"

கூட்டைத் திறந்து மனம் கவி
வேட்டைக்குப் போகிறது!
காட்டைக் கவிதையாக்கி
ஏட்டைப் புரட்டுகையில் மனக்

கூட்டைக் கலைத்துக் கொண்டு
பாட்டைப் பாடுகின்றாய்! நீ
பாட்டைப் பாடுகையில் உன்
பாட்டை நான் இரசிக்கையில் கலைக்

கூட்டுக்குள் அடைத்துவைத்து மன
வேட்டுக்கள் தீர்க்கின்றாய்! "என்
வீட்டுக்குள் உனை ஏன்விட்டேன்!" என்று
கேட்டுக்கொள் கேள்விக்கு "காதல்

மாட்டிக்கொள்!" என்கின்றாய்! நான்
காட்டிக்கொள்ளாமல் மௌனப்
போட்டிக்குத் தயாரானால் குறை
காட்டிக் கொல்கின்றாய்! எனை

ஆட்டிப் படைக்கின்றாய்! "எனை
வாட்டி வதைப்பது சரிதானா!' என்று
நீட்டி முளக்கிப் பிடிவாதம் செய்கின்றாய்!உனைப்
பாட்டில் கொடுத்திடவா! உன்காதலைச்

சூட்டிக்கொண்டாடிவா! மன
வீட்டில் பூட்டிக்கொண்டாடிவா! நான்
மாட்டிக்கொண்டேனடி! கண்ணே கலைமானே!
கூட்டிக்கொண்டாடடி பெண்ணே கவிமானே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4131&hl=

"இதயத்தில் நீ!"


இதயத்தின் இனிய குரல்! புதிய
உதயத்தைக் காட்டும் குரல்! இனிய
இதயத்தின் புனிதனிவன்! என்
உதயத்தின் ஒளிக்கீற்று இவன்!

இதயங்கள் மறக்காத இனிய
உதயகீதங்கள் இசைத்த குயில்!மனித
இதயங்கள் மட்டுமன்றி அசையும்
உதயஜீவன்கள் மயங்கும் குயில்!

இதயத்தை வருடும்! இமய
உயரத்தை தொட்டுமகிழும்! புதுமை
உதயத்தை உலகுக்களிக்கும்! அருமை
இதயத்தின் புனிதம் இவன்!

இதயங்கள் இருட்டாயிருக்கும் உலக
இதயங்கள் இவன் குரல்கேட்டால் புதிய
உதயங்கள் பொருட்டாய் மீட்டும்!இனிய
உதயங்கள் இவன்பாட்டில் மிளிரும்!

"காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளில் அவள் ஓவியம்!" கவி
காலங்கள் அழியாத பாடல் ஒலி
அலைகளில் அழியாத ஓவியம்! கவிக்

கோலங்கள் போட்ட கவியரசன்
"கலைத்தாயின் கவிக்கடல்"கண்ணதாஸன்
கலைக்காவியக் குரல்வண்ணன் பி.பி.ஸ்ரீநிவாஸை
"காலங்கள் அழியாத குரல்மேதை" என்று இசைக்

கோலங்கள் இமயத்தைப் புகழ்ந்தவிதம்
கலைக்கோலங்கள் இதயத்தை நிறைத்த இதம்
"மலைச்சிகரங்கள்" எம்.எஸ்.வி ராமமூர்த்தி புகழ்
காலங்கள் அழியாத இதய மதுரக்குரலோன்!

காலங்கள் அழியாத குரல்வண்ணன்! கவிக்
கோலங்கள் போடும் கவிக்கண்ணனிவன் பல
மலை மொழிகளின் பார்புகழ் நாயகன் பி.பி.ஸ்ரீநிவாஸன்
கலை மொழிகளின் ஓவியன்! என் இதயத்து இனிய நாயகனே!

காலங்கள் காலங்கள் நீ வாழ்க!
கலைக்கோலங்கள் புகழோடு நீ வாழ்க!
ஞாலங்கள் போற்றிடும் நீ வாழ்க!
காலைக்கதிரவன் ஒளியாக நீ வாழ்க!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"சத்தியம் ஜெயிக்குமடி!'

சத்தியம் பேசுவது சுலபம்! சிலரின்
சத்தியதைப்போல சக்தியில்லாத
சத்தியம் பேசுவது சுலபமடி கிளியே!
புத்தியதைப்போல சிலரின் குறுக்குப்

புத்தியதைப்போல பொய்ச்சத்தியம்
பத்தியம் இல்லாத புத்தியதைப்போல
சத்தியம் பேசுவது சுலபமடி கிளியே! உன்
புத்தியதைப்பாவியடி! பித்தலாட்டப் பொய்ச்

சத்தியம் பேசுகின்ற புத்திசாலிகளை
மத்தியில் காண்பியடி! பித்தலாட்டங்களை
மத்தியில் தோலுரித்துக்காண்பியடி!அவர்
சத்தியம் பொய்யென்று முச்சந்தியில்

புத்தியில் உறைக்க வைத்துக்காண்பியடி!
"பக்தியில் சக்தியில் சத்தியம் ஜெயிக்கும்!
மத்தியில் பித்தலாட்டப் பொய்யர்கள் மத்தியில்
சக்தியில் மெய்ச்சத்தியம் ஜெயிக்கும்" என்று

புத்தியில் புகட்டிடுவாய் கிளியே! அவர்
புத்தியில் புகட்டிடுவாய் கிளியே! போலி
யுக்திகள் வேஷங்கள் மோசங்களெல்லாம்
சக்திகள் அற்று சந்திசிரிக்கும்படிவைத்து

புத்தியைப் புகட்டிடுவாய் கிளியே! போலிப்
பக்திகள் நீலிக்கண்ணீர்கள் தோற்று
சத்தியம் ஜெயிக்கவைப்பாய் கிளியே! நாச
சக்திகள் நீங்கிடச் செய்வாய் கிளியே!

நெத்தியடியடி கிளியே!சக்திவெடியடி கிளியே!
புத்தியடியடி கிளியே! பக்தியடியடி கிளியே!
சக்தியடியடி கிளியே! உண்மைச்சக்தியடியடி! என்றும்
சக்தியுள்ள சத்தியசோதனை வெற்றிகள் சக்தியடி!

கத்திமுனை நின்றிருந்தாலும் சத்தியம் ஜெயிக்குமடி!
பக்திமுனை நிகர் சக்திக்கு முன்னாலே எத்தர்கள்
சக்திகள் சத்தியெடுக்குமடி! கிளியே! அவர் புத்திக்குள்
"சத்தியம் சாதிக்கும்" என்றே சான்றுகள் சொல்லிடடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"சுட்டும் பதில்"


"கேட்டுச்சொல்" என்றாய்! நானும்
கேட்டுத்தான் பார்த்தேன்! பதில்
காட்டுஞ்சொல் ஒன்றாய் வந்து நானும்
காணும்படி வந்ததே! இதயக்
கூட்டுச்சொல் நன்றாம்! தேனும்
தினைமாவும் சேர்ந்தால் நன்றாம்! குறி
காட்டுஞ்சொல் நன்றாம்! வந்து குறி
காட்டித்தான் பார்த்தேன்!

"வாட்டும்நிலை போக்கி, தினம்
தீட்டும் கவிபோலே, சுதி
கூட்டும் சுகராகம், மலை
நோக்கும் மனம்போலே,
காட்டும்கலை காக்கும்! வதை
வாட்டும் நிலைபோக்கும்! கனம்
கூட்டும் புவிமேலே, சுதி
ஓட்டும் இதய சோகபாரம்! உதயம்,

காட்டும்கிழக்கு நோக்கும்! மதி
காட்டும் வழிபிறக்கும்! நம்பி,
நீட்டும்கரம் சேர்ப்பாய்! சுதி
கூட்டும் விழிசேர்ப்பாய்! நதி
காட்டும் வழி நோக்கி, நடை
போட்டால் ஒளி பிறக்கும்! எனவுன்
வாட்டும் வழிபோக்க விடை
போட்டால் வழிதிறக்குமே!" என்றதே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"இதயநல் வாழ்த்துக்கள்!"

அகரத்தில் ஆரம்பம்!
அருணனின் ஆதித்தம்!
சிகரத்தில் ஓர் கம்பம்! வான்
அருணனின் ஆதித்தம்!

அருணனின் பதம்போற்றி
வருடத்தின் ஆரம்பம்!இதய
வருணனின் மழைபோலே உதய
வருடத்தின் வாழ்த்துக்கள்!

இருள் மனங்கள் அகன்றிடவே
ஒளிர் மனங்கள் நிறைந்திடவே நிலா
அருள் மனங்கள் வளர்ந்திடவே
தளிர் தினங்கள் நிறைந்திடவே!

பொருள் நிறைந்த பொதிபோலே
இருள் அகன்று ஒளிர்போலே புலர்
பொருள் நிறைந்த படைப்புக்கள் நிலா
அருள் மலர்ந்து நிறைந்திடவே

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
இதய நிறை வாழ்த்துக்கள்!
வாழ்த்துகின்ற உதயங்கள்
இதய நிறை வாழ்த்துக்கள்!

நிலா முற்ற நல் மனங்கள் அனைவர்க்கும்
இதய நிறை நல் வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"அன்றைய இன்று!"

சிந்தையைக்குளிரவைக்கும் தென்றலுடன்
சொந்தம் கொண்டாடிநின்றேன் அன்று!
சந்தம் இசைத்தவண்ணம் சங்கீதக்கடலில்
சிந்தையை மூழ்கடித்தாள் தென்றல்!

மந்தைக்கூட்டத்தில் மாதவன்கோபாலன்
சந்தம்இசைக்கும் புல்லாங்குழல்போல் என்
சிந்தைக்குள் இனிமைபெற சிருங்காரரசத்தோடு
சந்தம் இசைத்துநின்றாள் இசைத்தென்றல்!

சொந்தம் அவள்மடியாகி சிந்தைஅவளாகி
நந்தவன மலரவள் நறுமணத்தோடிசைந்துவர
சிந்துநதிக் கரையில் சிந்துகவி பாரதியாய்
சுந்தரமாய்க் கவிகொடுத்தேன் அன்று!

அந்தநாள் இந்த நாள்!தென்றல் எனைக் கலந்தநாள்!
இந்தநாள் அந்த சுகம் நினைத்தாலே இனிக்குதடி!
அந்தநாள் நினைவுகளை இன்று அசைபோட்டிடவே
இந்தநாள் மலர்ந்ததடி! இதயக்கவி பிறந்ததடி! நன்று!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4149&hl=

"உயிர்க்கலை!"

இன்றுபோல் இருக்கிறது! அன்று
இன்றுபோல் இருக்கிறது! இன்று
கன்றுபோல் மனது நின்று
வென்று துள்ளிக்குதிக்கிறது!வாழைக்
கன்றுபோல் தென்றலாய் இதயம்
இன்று துள்ளிக்குதிக்கிறது!உதயம்
அன்றுபோல் ஒளிச்சுடராய்
நின்று அள்ளிச்சிரிக்கிறது!

"என்று வரும் வசந்தம்
என்றுவரும்!' என்ற கேள்விக்கு
"என்றுமே மனம் இசைந்தால்
நன்றுவரும்!இதயம்
என்றுமே தினம் வசந்தம்
என்றும் கொண்டு வரும்!"
என்று இன்று என்மனம்
நன்று சொல்லிச்சிரிக்கிறது!

ஒன்று மட்டும் உண்மை!
ஒன்று மட்டும் உண்மை!
வென்று வரும் இளமை
நன்று இனிமை மனமென்றிருந்தால்
என்றும் வரும் சுகந்தம்!
நன்றும் தரும் மகரந்தம்!
என்றும் தேனூறி வாழ்க்கை
நன்று தந்துவிடும் புதுவசந்தம்!

இன்று ஓர்கனவில் கவிதைப்பெண்ணே!
நன்று நீ இணைந்தாய் இனியவளே!
கன்றிவிடும் கன்னம் கனிமுத்தங்கள்
நன்று நான் இணைத்தேன் கனியவளே!
"வென்றுவிடு!"என்றாய்! "என்னை
நன்று வெற்றிகொள் நீ!" என்றேன்!"நீங்கள்
ஒன்றிவிட்ட பின்பு உங்கள் இதய
மன்று வெற்றிதானே என்வெற்றி!" என்றாய்!

அன்றிலதாய் என்னுள் நீ
நின்றிருக்கும்போதில்
நன்றிலதாய் ஆகுமா!
நன்றில் என்றுமே ஆகுமே!
ஒன்றிலதாய் ஆகுமா! வெற்றி
என்றிலதாய் ஆகுமா!
அன்றிலதாய் ஆனவளே!
என்றும் சலனம் இதில் இல்லையே!

கொன்றுவிடும் கவலைகளை
வென்றுவிடும் உன்இதழ்க்கலை!
சென்றுவிடும் இடமெல்லாம் மனம்
நன்றுதரும் என் இதயக்கலை!
என்றும்வரும் தினம் கவிக்கலை! சினம்
வென்று மனங்களைச் சீர்திருத்தும்கலை!
என்றும்வரும் மனக்குயிற்கலை!
தென்றல்தழுவலடி! நீ என் உயிர்க்கலை!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

வியாழன், 4 ஜூன், 2009

"பொதுச்சொத்து!"


உலகத்தின் பொதுச்சொத்து!
உனக்குள் அடைக்க நினைக்காதே!
கலகத்தில் விடியல்சக்தி!அதைக்
கனக்கும் தடைக்குள் அடைக்காதே!

உலகத்தைப் பார்க்கும் விழிகள்!
கனக்கும் இதயத்தைக் கவியாக்கும் மொழிகள்!
சலனத்தைப் போர்வையாக்கும் மனங்களின்
கனக்கும் இதயத்தில் உதயத்தைக்காட்டும் கதிர்கள்!

உலகத்தைச் சுதிசேர்க்கும் இராகங்கள்!
உனக்குள் பூட்டிட நினைக்காதே!மௌனக்
கலசத்துள் சதிராடிடும் மனங்களின்
மனக்குளத்தினை உடைக்கும் புலர் இராகங்கள்!

உனக்குள் அடைத்திட நினைக்காதே! நீ
உனக்குள் அடைத்திட நினைத்தாலும்
தனக்குள் உடைத்திட வெளிக்கொணரும் கதிர்கள்!
உனக்குள் அடைத்திட நீ நினைக்காதே!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"வான் மலர் வாடாது!"

வசந்த வானம்!இது
வாடிப்போகாது!
இசைந்த கானம்!
தென்றல் ஓடிப்போகாது!
வசந்த கோலம்!இது
அழிந்துபோகாது!உயிரில்
இசைந்த காலம்!
என்றும் மறைந்துபோகாது!

கசந்த மனங்கள் கூட
வசந்தம் காணும்!கவிதை
இசைந்த தினங்கள் கூட
சுகந்தம் பாடும்!
இசைந்து மனங்கள் தேட
இணைந்து பாடும்!
வசந்த தினங்கள் நாட
வளைந்து நாணும்!

இசைந்த வானம் இது!
எழில் வரைந்த கோலம் இது!
வசந்த வரவுகளை
பொழில் நிறைந்து வழங்கும் இது!
இசைந்த ஞானம் இது!
இதயம் நிறைந்த ஞாலம் இது!புது
வசந்த இரவுபகல்
உதயம் வரைந்து விளங்கும் மது!

இசைந்த அலைகள்!
இதயம் நிறைந்த வான் அலைகள்!புது
வசந்த அழைப்புகளை
இதயம் வரைந்து வான் அழைக்கும் அலை!
அசைந்த அலைகள்!
உதயம் நிறைந்த வான் அலைகள்!
இசைந்த பூம்புனலாய் வான்
இதயம் நிறைந்து தென்றல் வருடும் அலைகள்!

ஓயாது! அதுசாயாது!
காயாது! அலை ஓயாது!கவி
ஓயாது! மது குறையாது!இதயம்
காயாது! புது மைகள் குறையாது!
சாயாது! மனம் சலிக்காது!இது
ஓயாது! ஒலி சுதி குறையாது!
மாயாது! தினம் வான்மலர் வாடாது!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"அழியாத கோலங்கள்!"


உன்னழகில் என் மனம் இலயித்து
என்மனதை நான் பறிகொடுத்த காலங்கள்!
முன்னசைவில் ஓர் அழகு!உன்
பின்னசைவில் சேர் அழகு!

சின்னப் பிள்ளையாட்டம் நீ
சின்னநடை நடந்துவந்து
என்னை வியக்கவைத்து நீ
மன்னனாய் உட்கார்ந்திருப்பாய்!

சின்னச் சின்னக் கோடுகளாய்
சின்னவுன் முதுகினிலே
முன்னிருந்து முக்கோலங்கள்
உன்னழகுக் கணிசேர்க்கையிலே

என்னை மறந்துநான்
உன்னை வியந்தேனடி!
கன்னத்தோடு உன்னை வைத்து
சின்ன முத்தங்கள் சேர்த்திருந்தேனடி!

சின்னச் சின்னக் கால்களுக்குள்
என்னே உன் வேகமடி! நீ
என்னை முந்தித் துவிச்சக்கரத்தின்
முன்னே நீ குறுக்கோடுகையில்

என்னே உன் வேகமடி! என்
பின்னே நான் திரும்பிப்பார்ப்பேன்!நீ
முன்னே வந்திட்டால் என்
பின்னே வெற்றிவரும்! என்றும்

உன்னைப் பார்த்திருந்தால்
என்மனதில் மகிழ்ச்சியடி!இன்றும்
உன்னைப் பார்க்கிறேன்! என்
மனக்கண்ணில் உன்னழகு!

சின்னச் சின்னக் கடிகடித்து நீ
தின்னுகின்ற தனியழகு! பழந்
தின்னுகின்ற உன்னழகு!பார்த்திருக்க
இன்னும் பலநூறு வரிகளுக்குப்பாலமிடும்!

வாழ்க நீ வாழ்க!அணில்
பிள்ளை நீ வாழ்க!மண்ணில்
வாழ்க! நீ வாழ்க! அணில்
பிள்ளையே!நீ என்றும் வாழ்க!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"திரைவிலகிடட்டும்!"

உழுகின்ற மண்ணில்
நீவிதைக்கின்ற விதைதான்
வருமென்ற எண்ணம் உன்னிடம்
உரைக்கின்ற வரைதான்!

எழுகின்ற எண்ணம் இதயம்
சிதைக்காத வரையில் நீ
வருமென்ற ஒன்று வந்து உனை
நிறைக்கின்ற வரைதான்!

அழுகின்ற மனமே! நீ
உதைக்கின்ற உதை உன்னிடம்
வருமென்ற ஒன்றை நீ
மறைக்காத வரைதான்!

விழுகின்ற காலம் நீ
விதைக்கின்ற கோலம்! அதைத்
தருமென்று என்றும் நீ
மறக்காத வரைதான்!

அழுகின்ற வரையில் நீ
புதைக்கின்ற சாட்சி நீதி
தருமென்ற நியதி நீ
மறுக்கின்ற நிலையில்......

விழுகின்ற வினைகள் வீழ்ந்திடட்டும்!
சிதைக்கின்ற மனங்கள் சாய்ந்திடட்டும்!
"வரும்" என்ற நியதி நிலைத்திடட்டும்!
மறைக்கின்ற மனங்கள் திரை விலகிடட்டும்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


"இணைந்து நீ வாராய்!"


தென்னை இளங்கீற்றே! எனைத்தேடிவந்து
முன்னை மனதோடு உடலோடு வருடியபோது நான்
என்னை மறந்திருந்து சுகித்திருந்த காலம்
என்னை இளங்கீற்றோடு இணைத்திருந்த கோலம்

முன்னம் ஒளவைசொன்ன பாட்டு அது
இன்னும் என்மனதின் தாலாட்டு!"நன்றி"
என்னும் மூன்றெழுத்தின் "தண்மை" என்றும்
இன்னும் தோன்றிடும் தேன்பாலூட்டும்!

தன்னுள் தாழ் சேர்த்தெடுத்த நீரை தலை
தன்னுள் தான்பதமாய்த் தந்து உலகம்
இன்னும் வியந்திருக்கும் "இளநீர்" இறை
இன்னும் இயற்கையதாய் நிலை சொல்லும்!

தென்னை இளங்கீற்றே! தென்றல் தாயே!
உன்னைப் பாடவார்த்தைகள் செந்தமிழில்
என்னைத் தென்றலதாய் வருடிவருகிறதே தாயே!
உன்னைப் படைத்தவனின் பெருந்தன்மை தன்னை

இன்னமும் நான் வியக்கின்றேன் தாயே!
இன்னமுதே! தென்னைமுத்தே! என்றும்
மன்னுலகம் போற்றிடவே வாழ்வாய்!என்றும்
என்னுலகில் என்னோடு இணைந்து நீ வாராய்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"கண்துடைப்பு!"

என்னவளைத்தேடி
எங்கெங்கோ அலைகின்றேன்!
முன்னவளைச்சந்தித்து
முகத்தோடு முகம்வைத்து
பின்னலிடும் காதல்
பொங்கிப்பிரவாகிக்க நிலை
மின்னலிடும் போதினில்
சுகத்தோடு சுகம்சேர்த்து

என்னவளைச் சேர்த்திருந்து
வேர்த்திருந்த நிலையுணர
பின்னவளை மறந்துவிட
வைத்துவிட்ட நிழல்தொடர
என்னவிது என்பிழைப்பு!
ஏனிந்த வீண்பிறப்பு!காதல்
முன்னமிது பார்க்கவில்லை!
காலமதன் கண்துடைப்பு!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5562&hl=