வெள்ளி, 2 அக்டோபர், 2009

இதயம் எழுதும் மடல் (21)



விழிகளின் நெருக்கத்தில்
மொழிகளின் மயக்கத்தில்
இதழ்களின் கிறக்த்தில் மை
இதழ்களின் விருப்பத்தில்

இதயம் எழுதுகின்ற
இன்ப மடல் இன்றும் உனக்காக விரிகிறது!
உதயம் காண் கிழக்காக....

இனிப்பாக வருகிறது...
கனிப்பாவை நீ வந்து தை
இனிப்பாகைத் தந்ததனால்...

பனிப்பாவை பொழிந்திருக்க...
இனிப்பாக நீ வந்து தேன்
இனிப்பாகத் தந்ததனால்...கவி

இனிப்பாக வருகிறது!இதழ்கள்
இனிப்பாகி வழிகிறது!நிலவில்
பனிப்போர்வை விரிக்கிறது!

தை மலர்ந்த நேரமதில்
தை மலர்ந்தாய் நெஞ்சினிலே!
"தை பிறந்தாள்!" என்று சொன்னாய்!

தை விரிப்பாய் விழி மலர்ந்தேன்!
"தைப் பொங்கல் இன்று உங்கள்
தையலுக்கு என்ன பொங்கல்!" என்றாய்!

"தையலுக்கும் மையலுக்கும்
தைமலரின் மலர்தலுக்கும் தேன்
தைமொழிக் கவிமலர்தான் அர்ச்சனைகள்!" என்றேன்!

"இதழ்கள் காத்திருக்கு!கவி
இதழ்களில் வடித்துவிட கவி
இதய மன்னவனின் சுணக்கம் ஏன்!" என்றாய்!

"இதழ்கள் விரிகின்ற அழகின் சுகநிலை!
இதழ்களின் விருப்பினில் வளர்கின்ற அகநிலை!
இதழ்களில் வடித்திட வடித்திட வளருமே! "என்றேன்!

'விரியட்டும் மடல்கள்!
விரியட்டும் மனங்கள்!
புரியட்டும் நர்த்தனங்கள்!'என்று

விரிகின்ற இதழ்களால்..
விரிகின்ற மடல்களில்...
விரிகின்ற சுகங்கள் விரிந்தன....

விழித்திருக்கும் விழிகளில்
விழித்திருக்கும் உணர்வுகளில்
விழித்திருக்கும் சங்கமத்தின் எதிர்பார்ப்பு!

களித்திருப்பு நினைவுகளின் பிரதிபலிப்பு!
களிநடம் புரிகின்ற தோகைமயில் விரிப்பு!
களித்திருப்பைக் கூட்டிவைத்து இலயிப்பு!

இதயம் இருக்கும் இடம் பார்த்து
இதழ்கள் இனிதாகப் பதம்பார்க்க
உதயம் காணும் சுகங்கள்....

இதயம் விரித்துச் சிறகடிக்க
இதழ்கள் விரித்துப் புதுயுகம்படைக்க...
உதயம் தரும் கிழக்கு வெளுப்பாய்....

'இதுதான்!இதுதான்!இதுபோல் மது எதுதான்...
அதுதான்!அதுதான்!அதுபோல் இடம் எதுதான்....
மதுதான் இதழ்கள் சுரக்கும் மதுதான்'என்று....

உடல்கள் இரண்டும் சிலிர்த்திருக்க...தேன்
மடல்கள் துவண்டு இனித்திருக்க...
கடல்நதிதான் உடல்மேல் படர்ந்ததுபோல்...

'இதுதான் சுகங்கள்!'என்று இதயம் கலந்து
மதுவாய் மாது நீ மகிழ்ந்திருக்க
புதுவாய்ப் பூத்த புதுப்பொலிவாய்....

மடல்கள் விழிமடல்கள் கூடிக்களித்திருந்து...
மடல்கள் வாழைமடல்தன்னில் மழைத்துளியாய்...
திடல்கள் தேன்இதழ்கள் நாடிக்களித்த நாளதுவாய்....

மலர்ந்தாள் தைப்பாவை!
மலர்ந்ததுபோல் தைப்பாவை நீ மலர்ந்திருந்தாய்!...
புலர்ந்தாள் புதுக்கவிதை...

புலர்ந்ததுபோல் புதுப்பொலிவாய்...
புலர்ந்திருந்த உன்முகம்பார்க்க
புலர்ந்தது பூங்கவிதை!பூமாலைச்சரமதுவாய்!
புலர்ந்தது வாய் "பூங்கோதை!புலர்ந்ததடி பிடித்திருக்கா!"...

மீண்டும் மறுமடலோடு இதமாய் வருடும்வரை...

நன்றி!
அன்புடன்
ஆதித்ததாஸன்

1 கருத்து: