
எண்ணமெல்லாம் நீயாய்
எனக்குள் இனிப்பவளே!
வண்ணமெல்லாம் கண்ணனாகி
எண்ணமெலாம் ஆண்டாளாய்... கவிதை படிப்பவளே!
அன்றைய நினைவுகளை
இன்றும் இதமாய் மீட்டிவிட....
இன்றைய அதிகாலை உன் தரிசனம்!
கனவில்தான்! கனவுகள்தானே
நினைவுகளின் எதிரொலியாகின்றன!
மனதில் நள்ளிரவின் நினைவுதான்!
பள்ளிகொள்ளும் புள்ளிமயில்! மனதில்
துள்ளிவிளையாடினாய்! உள்ளிருக்கும்
வெள்ளிமலர்ச்சிரிப்பினில் எனைத்தாக்கினாய்!
"கள்ளி என்னடி!" என்றேன்!
அள்ளிவரும் ஆசையோடு அழகாக நோக்கினாய்!
துள்ளிவந்த விழிக்கணையால்....
"சொல்லடி!" என்றேன்!
"இன்று என்ன தேதி!" என்றாய்!
"என்னடி நள்ளிரவு தாண்டியாச்சே!
இருபத்தியொன்றடி!" என்றேன்!
"இரு! பத்தில் ஒன்றைத்தொடடி! என்றேன்!
இரு இதழோடு இதழ் வைத்து இணைத்தாய்!
இருநிமிட மௌனங்கள்!
இருநிலை மறந்து வருடல்கள்!
ஒருநிலைக்குள் உள்ளங்கள்!.....
"ஓ! முதல் பார்வை கொடுத்தமுத்தம்!
மறந்திடத்தான் முடிந்திடுமா! விழிப்பார்வை
தொடுத்ததுவும்.... முதல்முத்தம் கொடுத்ததுவும்...
இன்றல்லவா! இன்றல்லவா!
ஒன்றாகிக் கலந்தநாள்
இன்றல்லவா! மறந்தேனடி கள்ளி!
மன்னிப்பாய்!" என்றேன்!
உன்னிப்பாய் விழிகலந்தாய்!
"மன்னிப்பா! கிடையாது! என்றாய்!
"மன்னிக்கும் கடவுளல்ல நான்! என்றாய்!
"மன்னிக்கும் மனந்தானடி கடவுள்!" என்றேன்!
உன்னிப்பாய் இழுத்தணைத்து இதழ்பதித்தாய்!
"இன்றுபோல் இருக்கிறது!
அன்று தந்த நினைவுகள்!
நன்றுதான்! நன்றுதான்!"
என்று என் நினைவலைகள்.....
நன்று நான் கண்ணுறங்கி விட்டேன்!
தென்றல் தழுவல் ஒன்று கதவு
திறந்து மெல்ல வருடியது!.....மனக்கதவு
திறந்து மெல்ல சுகமாக வருடியது! போர்வை
திறந்து மெல்ல சுகராகம் பாடியது!
"தூக்கமா!" என்றாய்..."உன்
தாக்கம் தீரவில்லை! என்றேன்!
"ஏக்கங்கள் தீர்வதற்கு நாள் வரட்டும்" என்றாய்!
மடிமீது என் தலைவைத்து
இதமாகக்கோதினாய்! "விடிகாலைப்
பொழுதடி! வீணாகலாமா!" என்றேன்!
"விடிகாலைப்பொழுதில் கவி
வடித்திடலாம்! எழுந்திருங்கள்!" என்றாய்!
"மடிமீது கவிபடிக்கப் புதுராகம் பிறக்கும்" என்றேன்!
"அடிதான் கிடைக்கும்! அதற்கெல்லாம்
முடியாது! எழுந்திருங்கள! என்றாய்!
"அடி போடி...தாடி! தேன் தாடி!" என்றேன்!
"தேன் ஓடிப்போய் விடாது!
தேன் மொழி வாடிப்போய்விடாது! இதழ்த்
தேன் வற்றிப்போய் விடாது!
காலம் வரட்டும்!கவிதைக்
கோலம் போடுதற்கு அந்தக்
காலம் வரட்டும்! கவிதைக்
கோலம் வரட்டும்! எழுந்து எழுதுங்கள்!
கோலமயில் காத்திருக்கிறாள்! மை
கோப்பையோடு!" என்றாய்!
"என்னடி! கவிதை! கவிதை! என்கிறாய்!
கவிதை நீ தராமல் கவிதை எப்படி வரும்!" என்கிறேன்!
கன்னமது சிவந்திடக் "காத்திருங்கள்! கவிதை
சேர்த்தெடுத்துக்கொடுக்கும்
காலம் வரும்! எனை
வார்த்தெடுத்துக் கொடுக்கும் நாளும் வரும்" என்றாய்!
"எழுந்திருங்கள்! எல்லோரும்
விழித்திருக்கப் போகிறார்கள்!
எழுந்திடுங்கள்! கவிதை எழுதிடுங்கள்!
வாரப் பத்திரிகைக் காரனுக்கு
நேரம் கொடுத்திருக்கிறேன்! விடியல்
காலை கொடுத்திடணும்! எழுந்திருங்கள்!" என்றாய்!
"கவிதை நீ தராமல்
கவிதை வராதடி! ஒன்று தாடி! இல்லைக்
கவிதை வராதடி போடி!" என்றேன்!
"கவிதை நன்று எழுதுங்கள்!
கவிதை ஒன்று தருவாள்!" என்றாய்!
"கவிதையே! ஒன்று கொடேனடி இப்போது!" என்றேன்!
"இன்று ஒரு வழி பார்ப்பதாக உத்தேசமோ!
ஒன்றுங் கிடைக்காது! எழுந்திருங்கள் முதலில்!"
என்று இழுத்து எழுப்பி விட்டாய்!
"என்னடி தொல்லை உன்னோடை!
சொல்லடி! என்ன தலைப்பு!" என்றேன்!
"சந்திக்கு வராத சங்கதிகள்!" என்றாய்!
"என்னடி தலைப்பு இது!
யாரடி தந்தது இதை!
சொல்லடி!" என்றேன்!
"கொடுத்தது நான் தான்!
எடுத்து எழுதுங்கள்!" என்றாய்!"தலைப்பைக்
கொடுத்தது நீயா! என்னடி சொல்கிறாய்....
கொடுப்பதற்குத் தலைப்பில்லாமல்
கொடுத்தியா இத்தலைப்பை!போடி!
கொடுத்திட முடியாதென்று சொல்லடி!"என்றேன்1
"ஏன் தலைப்புக்கு என்ன குறைச்சல்!
என்னவாம் ஏது! நாடு போற போக்கைப்பார்த்து
நான்தான் கொடுத்தேன் இத்தலைப்பை!
எந்தத் தலைப்பிலும் கவிதை
சந்தம் படைப்பவர் நீங்கள்!
இந்தத் தலைப்புக்கென்ன குறைச்சலைக் கண்டீர்கள்!" என்றாய்!
"இந்தத் தலைப்பில் குறைச்சலில்லை!
சந்தக் கவிக்கும் குறைச்சல் இல்லை!
சந்தைக் கிழுத்துவிடும் பல
சங்கதி வந்துவிடுமே! பல
சங்கடம் தந்திடுமே!" என்றேன்! "பலர்
சங்கதி வரட்டும! என்றே தந்ததே இத்தலைப்பு!" என்றாய்!
"தந்தை முழித்துவிட்டார்! சத்தம் கேட்கிறது!
தப்பாகப் போகிறது! நான் வருகிறேன!" என்றாய்!
சத்தமில்லாமல் சங்கடந்தந்து சென்றாய்!
சட்டென்று கண்விழித்தேன்!
கண்டது கனவாய்ப்போக கவிதையுனைக்
கண்டநாள் நினைவு துள்ள
வடிக்கின்றேன் மடலில்..
துடிக்கின்றேன் மனதில்!...
படித்தபின் துடிப்பாய்! நீயும்
வடித்திடு கவிதையாக!
தென்றலாய் வந்தாய்! மன
முன்றலில் மகிழ்வு தந்தாய்!
இன்றுபோல் நினைவிருக்க...உனைத்
தென்றலாய் வருடி......
மீண்டும் மறுமடலோடு இணையும் வரை.....
அன்புடன்
ஆதித்ததாஸன்
எனக்குள் இனிப்பவளே!
வண்ணமெல்லாம் கண்ணனாகி
எண்ணமெலாம் ஆண்டாளாய்... கவிதை படிப்பவளே!
அன்றைய நினைவுகளை
இன்றும் இதமாய் மீட்டிவிட....
இன்றைய அதிகாலை உன் தரிசனம்!
கனவில்தான்! கனவுகள்தானே
நினைவுகளின் எதிரொலியாகின்றன!
மனதில் நள்ளிரவின் நினைவுதான்!
பள்ளிகொள்ளும் புள்ளிமயில்! மனதில்
துள்ளிவிளையாடினாய்! உள்ளிருக்கும்
வெள்ளிமலர்ச்சிரிப்பினில் எனைத்தாக்கினாய்!
"கள்ளி என்னடி!" என்றேன்!
அள்ளிவரும் ஆசையோடு அழகாக நோக்கினாய்!
துள்ளிவந்த விழிக்கணையால்....
"சொல்லடி!" என்றேன்!
"இன்று என்ன தேதி!" என்றாய்!
"என்னடி நள்ளிரவு தாண்டியாச்சே!
இருபத்தியொன்றடி!" என்றேன்!
"இரு! பத்தில் ஒன்றைத்தொடடி! என்றேன்!
இரு இதழோடு இதழ் வைத்து இணைத்தாய்!
இருநிமிட மௌனங்கள்!
இருநிலை மறந்து வருடல்கள்!
ஒருநிலைக்குள் உள்ளங்கள்!.....
"ஓ! முதல் பார்வை கொடுத்தமுத்தம்!
மறந்திடத்தான் முடிந்திடுமா! விழிப்பார்வை
தொடுத்ததுவும்.... முதல்முத்தம் கொடுத்ததுவும்...
இன்றல்லவா! இன்றல்லவா!
ஒன்றாகிக் கலந்தநாள்
இன்றல்லவா! மறந்தேனடி கள்ளி!
மன்னிப்பாய்!" என்றேன்!
உன்னிப்பாய் விழிகலந்தாய்!
"மன்னிப்பா! கிடையாது! என்றாய்!
"மன்னிக்கும் கடவுளல்ல நான்! என்றாய்!
"மன்னிக்கும் மனந்தானடி கடவுள்!" என்றேன்!
உன்னிப்பாய் இழுத்தணைத்து இதழ்பதித்தாய்!
"இன்றுபோல் இருக்கிறது!
அன்று தந்த நினைவுகள்!
நன்றுதான்! நன்றுதான்!"
என்று என் நினைவலைகள்.....
நன்று நான் கண்ணுறங்கி விட்டேன்!
தென்றல் தழுவல் ஒன்று கதவு
திறந்து மெல்ல வருடியது!.....மனக்கதவு
திறந்து மெல்ல சுகமாக வருடியது! போர்வை
திறந்து மெல்ல சுகராகம் பாடியது!
"தூக்கமா!" என்றாய்..."உன்
தாக்கம் தீரவில்லை! என்றேன்!
"ஏக்கங்கள் தீர்வதற்கு நாள் வரட்டும்" என்றாய்!
மடிமீது என் தலைவைத்து
இதமாகக்கோதினாய்! "விடிகாலைப்
பொழுதடி! வீணாகலாமா!" என்றேன்!
"விடிகாலைப்பொழுதில் கவி
வடித்திடலாம்! எழுந்திருங்கள்!" என்றாய்!
"மடிமீது கவிபடிக்கப் புதுராகம் பிறக்கும்" என்றேன்!
"அடிதான் கிடைக்கும்! அதற்கெல்லாம்
முடியாது! எழுந்திருங்கள! என்றாய்!
"அடி போடி...தாடி! தேன் தாடி!" என்றேன்!
"தேன் ஓடிப்போய் விடாது!
தேன் மொழி வாடிப்போய்விடாது! இதழ்த்
தேன் வற்றிப்போய் விடாது!
காலம் வரட்டும்!கவிதைக்
கோலம் போடுதற்கு அந்தக்
காலம் வரட்டும்! கவிதைக்
கோலம் வரட்டும்! எழுந்து எழுதுங்கள்!
கோலமயில் காத்திருக்கிறாள்! மை
கோப்பையோடு!" என்றாய்!
"என்னடி! கவிதை! கவிதை! என்கிறாய்!
கவிதை நீ தராமல் கவிதை எப்படி வரும்!" என்கிறேன்!
கன்னமது சிவந்திடக் "காத்திருங்கள்! கவிதை
சேர்த்தெடுத்துக்கொடுக்கும்
காலம் வரும்! எனை
வார்த்தெடுத்துக் கொடுக்கும் நாளும் வரும்" என்றாய்!
"எழுந்திருங்கள்! எல்லோரும்
விழித்திருக்கப் போகிறார்கள்!
எழுந்திடுங்கள்! கவிதை எழுதிடுங்கள்!
வாரப் பத்திரிகைக் காரனுக்கு
நேரம் கொடுத்திருக்கிறேன்! விடியல்
காலை கொடுத்திடணும்! எழுந்திருங்கள்!" என்றாய்!
"கவிதை நீ தராமல்
கவிதை வராதடி! ஒன்று தாடி! இல்லைக்
கவிதை வராதடி போடி!" என்றேன்!
"கவிதை நன்று எழுதுங்கள்!
கவிதை ஒன்று தருவாள்!" என்றாய்!
"கவிதையே! ஒன்று கொடேனடி இப்போது!" என்றேன்!
"இன்று ஒரு வழி பார்ப்பதாக உத்தேசமோ!
ஒன்றுங் கிடைக்காது! எழுந்திருங்கள் முதலில்!"
என்று இழுத்து எழுப்பி விட்டாய்!
"என்னடி தொல்லை உன்னோடை!
சொல்லடி! என்ன தலைப்பு!" என்றேன்!
"சந்திக்கு வராத சங்கதிகள்!" என்றாய்!
"என்னடி தலைப்பு இது!
யாரடி தந்தது இதை!
சொல்லடி!" என்றேன்!
"கொடுத்தது நான் தான்!
எடுத்து எழுதுங்கள்!" என்றாய்!"தலைப்பைக்
கொடுத்தது நீயா! என்னடி சொல்கிறாய்....
கொடுப்பதற்குத் தலைப்பில்லாமல்
கொடுத்தியா இத்தலைப்பை!போடி!
கொடுத்திட முடியாதென்று சொல்லடி!"என்றேன்1
"ஏன் தலைப்புக்கு என்ன குறைச்சல்!
என்னவாம் ஏது! நாடு போற போக்கைப்பார்த்து
நான்தான் கொடுத்தேன் இத்தலைப்பை!
எந்தத் தலைப்பிலும் கவிதை
சந்தம் படைப்பவர் நீங்கள்!
இந்தத் தலைப்புக்கென்ன குறைச்சலைக் கண்டீர்கள்!" என்றாய்!
"இந்தத் தலைப்பில் குறைச்சலில்லை!
சந்தக் கவிக்கும் குறைச்சல் இல்லை!
சந்தைக் கிழுத்துவிடும் பல
சங்கதி வந்துவிடுமே! பல
சங்கடம் தந்திடுமே!" என்றேன்! "பலர்
சங்கதி வரட்டும! என்றே தந்ததே இத்தலைப்பு!" என்றாய்!
"தந்தை முழித்துவிட்டார்! சத்தம் கேட்கிறது!
தப்பாகப் போகிறது! நான் வருகிறேன!" என்றாய்!
சத்தமில்லாமல் சங்கடந்தந்து சென்றாய்!
சட்டென்று கண்விழித்தேன்!
கண்டது கனவாய்ப்போக கவிதையுனைக்
கண்டநாள் நினைவு துள்ள
வடிக்கின்றேன் மடலில்..
துடிக்கின்றேன் மனதில்!...
படித்தபின் துடிப்பாய்! நீயும்
வடித்திடு கவிதையாக!
தென்றலாய் வந்தாய்! மன
முன்றலில் மகிழ்வு தந்தாய்!
இன்றுபோல் நினைவிருக்க...உனைத்
தென்றலாய் வருடி......
மீண்டும் மறுமடலோடு இணையும் வரை.....
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக