வெள்ளி, 2 அக்டோபர், 2009

இதயம் எழுதும் மடல் (21)



விழிகளின் நெருக்கத்தில்
மொழிகளின் மயக்கத்தில்
இதழ்களின் கிறக்த்தில் மை
இதழ்களின் விருப்பத்தில்

இதயம் எழுதுகின்ற
இன்ப மடல் இன்றும் உனக்காக விரிகிறது!
உதயம் காண் கிழக்காக....

இனிப்பாக வருகிறது...
கனிப்பாவை நீ வந்து தை
இனிப்பாகைத் தந்ததனால்...

பனிப்பாவை பொழிந்திருக்க...
இனிப்பாக நீ வந்து தேன்
இனிப்பாகத் தந்ததனால்...கவி

இனிப்பாக வருகிறது!இதழ்கள்
இனிப்பாகி வழிகிறது!நிலவில்
பனிப்போர்வை விரிக்கிறது!

தை மலர்ந்த நேரமதில்
தை மலர்ந்தாய் நெஞ்சினிலே!
"தை பிறந்தாள்!" என்று சொன்னாய்!

தை விரிப்பாய் விழி மலர்ந்தேன்!
"தைப் பொங்கல் இன்று உங்கள்
தையலுக்கு என்ன பொங்கல்!" என்றாய்!

"தையலுக்கும் மையலுக்கும்
தைமலரின் மலர்தலுக்கும் தேன்
தைமொழிக் கவிமலர்தான் அர்ச்சனைகள்!" என்றேன்!

"இதழ்கள் காத்திருக்கு!கவி
இதழ்களில் வடித்துவிட கவி
இதய மன்னவனின் சுணக்கம் ஏன்!" என்றாய்!

"இதழ்கள் விரிகின்ற அழகின் சுகநிலை!
இதழ்களின் விருப்பினில் வளர்கின்ற அகநிலை!
இதழ்களில் வடித்திட வடித்திட வளருமே! "என்றேன்!

'விரியட்டும் மடல்கள்!
விரியட்டும் மனங்கள்!
புரியட்டும் நர்த்தனங்கள்!'என்று

விரிகின்ற இதழ்களால்..
விரிகின்ற மடல்களில்...
விரிகின்ற சுகங்கள் விரிந்தன....

விழித்திருக்கும் விழிகளில்
விழித்திருக்கும் உணர்வுகளில்
விழித்திருக்கும் சங்கமத்தின் எதிர்பார்ப்பு!

களித்திருப்பு நினைவுகளின் பிரதிபலிப்பு!
களிநடம் புரிகின்ற தோகைமயில் விரிப்பு!
களித்திருப்பைக் கூட்டிவைத்து இலயிப்பு!

இதயம் இருக்கும் இடம் பார்த்து
இதழ்கள் இனிதாகப் பதம்பார்க்க
உதயம் காணும் சுகங்கள்....

இதயம் விரித்துச் சிறகடிக்க
இதழ்கள் விரித்துப் புதுயுகம்படைக்க...
உதயம் தரும் கிழக்கு வெளுப்பாய்....

'இதுதான்!இதுதான்!இதுபோல் மது எதுதான்...
அதுதான்!அதுதான்!அதுபோல் இடம் எதுதான்....
மதுதான் இதழ்கள் சுரக்கும் மதுதான்'என்று....

உடல்கள் இரண்டும் சிலிர்த்திருக்க...தேன்
மடல்கள் துவண்டு இனித்திருக்க...
கடல்நதிதான் உடல்மேல் படர்ந்ததுபோல்...

'இதுதான் சுகங்கள்!'என்று இதயம் கலந்து
மதுவாய் மாது நீ மகிழ்ந்திருக்க
புதுவாய்ப் பூத்த புதுப்பொலிவாய்....

மடல்கள் விழிமடல்கள் கூடிக்களித்திருந்து...
மடல்கள் வாழைமடல்தன்னில் மழைத்துளியாய்...
திடல்கள் தேன்இதழ்கள் நாடிக்களித்த நாளதுவாய்....

மலர்ந்தாள் தைப்பாவை!
மலர்ந்ததுபோல் தைப்பாவை நீ மலர்ந்திருந்தாய்!...
புலர்ந்தாள் புதுக்கவிதை...

புலர்ந்ததுபோல் புதுப்பொலிவாய்...
புலர்ந்திருந்த உன்முகம்பார்க்க
புலர்ந்தது பூங்கவிதை!பூமாலைச்சரமதுவாய்!
புலர்ந்தது வாய் "பூங்கோதை!புலர்ந்ததடி பிடித்திருக்கா!"...

மீண்டும் மறுமடலோடு இதமாய் வருடும்வரை...

நன்றி!
அன்புடன்
ஆதித்ததாஸன்

இதயம் எழுதும் மடல் (20)


கிழக்குநோக்கி விழிமடல்திறக்கும்!
வழக்காய் மனம் கிழக்காய்
கிழக்கின் பார்வையில் இதய
விளக்காய் ஒளிர்பவளே!உன்

கிழக்கில் இருந்து இன்றும் ஒருமடல் உனக்காய்.....

காலையது சிந்தனைகள் பிறப்பிடம்!
மாலையது ஏக்கத்தின் இருப்பிடம்!நள்ளிரவு
சோலையுடன் உற(றை)விடம்!

பாலைவனமானாலும்
சோலைநீ இணைந்துவிட்டால்...
காலைமலர்த் தென்றல்தவழ் சோலையாகுமே!

"என்ன புதுக்கவிதை" என்கிறாயா...
சின்னதாய் ஒரு கிறுக்கல் சிந்தனையில்....
சின்னக்கண்ணம்மா உனக்காய்...

"என்னாச்சு!மூடு வந்தாச்சா!" என்கிறாயா....
சொன்னாத்தான் புரியணுமா மண்டு...இதழ்கள்
சொன்னாத்தான் விரியணுமா கற்கண்டே...

"சரி!சரி! புரியுது புரியுது"...என்கிறாயா..
விரிகிற விழிகள் பதில் சொல்லுமே மண்டு...
"சரி சரி தொடரட்டும!" என்று இதழ் முணுமுணுப்பா...

சிரி! சிரி! சிரிக்கின்ற அழகே அது தனிக்கனி!
விரிகின்ற இதழ்கள் வடிக்கின்ற தேன்கள்
மரிக்கின்ற போதும் வேண்டுமடி மண்டு...

சிரிக்கின்ற அழகைப்படம் பிடித்தால் மடல்
விரிக்கின்ற தமிழே தொடர்கதையே...
விரிக்கின்ற கடலலைபோல் படர்கதையே!கடல்

சிரிக்கின்ற கவிநயம் கூட்டிடுமே...
எரிக்கின்ற காற்றும் குளிர் சேர்த்திடுமே!கவி
விரிக்கின்ற தேன்தமிழ் சுதிகாட்டிடுமே!

"குளிர்கால நடுக்கத்தில் பனி(ஐஸ்)மழையா...
துளிர்காலம் போயாச்சுக் கண்ணா!இது
குளிர்காலமையா வைக்காதீர் பனித்துகளை....

தளிர்காலம் வரட்டும் காத்திருங்கள"..என்கிறாயா!
குளிர்காலம் வந்தாலென்ன!இலை
தளிர்காலம் வந்தாலென்ன!போடிமண்டு...

வாடிநிற்கும் செடிகூட துளிர்த்துவிடும்!
மூடிநிற்கும் முகம்கூட தெரிந்துவிடும்!
ஆடிநிற்கும் பம்பரமாய் இதயம் சுழன்றடித்துநிற்கும்!

"வாடி" என்று சொல்லிசைக்கும் முன்பாக இதயம்
கூடிநின்று கூத்தடிக்கும்!தெம்பாகும்!உதயம்
பாடிவரும் பாட்டுக்கு அடிகொடுக்கும்!அடி

என்னவளே! உன்னழகுச்சிரிப்புக்கு அந்தசக்தி!
சின்னவளாய் இருந்தாலும் குண்டுமாங்காயானாலும்
மன்னவனே மயங்குகின்ற என்னவளே!

உன்னழகைச்சொல்லச் சொல்லச் சொல்லலாம்!
முன்னழகும் பின்னழகும் முன்னூறு படம்பிடிக்கும்!
என்னவளின் அழகுநிலை சின்னத்திரைத்தொடர்கதை....

இதழ்களின் சிவப்பும் விழிகளின் சிவப்பும்
இதழ்மடலோடு ஒன்றாய்ப் பதிக்கட்டும்!தொடர்ந்துபடி..
இதழோடு விளையாடும் இன்பநேரத்தில்...

இதமாய் ஒருபாடல்! இதழ்தவழ்தென்றலாய்
பதமாய் ஒருபாடல்! சுதிநயம் சேர்க்கவரும்
விதமாய் ஒருபாடல்!காவியக் கண்ணதாஸனவன்

காவியமாய்த் தீட்டிய "மாங்கனி"யில்
ஓவியமாய் ஒரு பாடல் பார்!இதயக்
காவியமானவன் வண்ணமாய்.....
"சின்ன வயதினிலே-சிரிக்கும்
செந்தமிழ்ச் சோலையிலே
கன்னிக் கடலமுதைக்-கருத்தால்
கண்டவன் யாரோடி!

தென்னவன் பிள்ளையடி-அவனோர்
சித்திரக் காரனடி!
கன்னல் வனந்தேடி-அலைந்த
காரியக்காரனடி!

நல்ல மனந்தானா!இணைந்தால்
நாடி மணப்பானா!
சொன்ன உறுதியெல்லாம்-காற்றில்
தூவி விடுவானா!

பிள்ளைக் குணந்தாண்டி-பேச்சில்
பித்தம் குழைப்பாண்டி!
வெள்ளை மனத்தாரை-வலையை
வீசிப் பிடிப்பாண்டி!

நட்ட நடுநிசியில்-ஒருநாள்
நல்ல மலரணையில்
கெட்ட குணமின்றி-எந்தன்
கிட்ட நடந்தாண்டி!

ஐயோ!
என்னென்ன சொன்னானோ!-சடையை
எட்டிப்பிடித்தானோ!
அன்னக்கொடியழகே!-உனையே
அன்பில் அணைத்தானோ!

அவ்வள வொன்றுமில்லை-கண்ணீர்
ஆற்றி நடந்தாண்டி!
கொவ்வை இதழ்துடிக்க-நானும்
கூவி அழுதேண்டி!

என்ன தவறு செய்தேன்!அவனை
எத்தித் துரத்திவிட்டேன்!
பின்னர் அவனுடனே-தனிமை
பேசக் கிடைக்கவில்லை!

முன்னர் நடந்ததெல்லாம்-துரையே
முற்றும் மறந்துவிடு!
பொன்னை நகையாக்கு- மார்பில்
பூட்டி மகிழ்ச்சி கொள்ளு!

என்று இரைந்தேண்டி-கேட்க
எவரும் இல்லையடி!
இன்று உரைத்ததெல்லாம்-வேறு
எவர்க்கும் இல்லையடி!" என்று
"
மாங்கனி"க் காவியத்தில்
மாங்கனி தன்தோழியுடன் தன்
மாங்கனி இதயத்தைத் திறந்துவைத்து

ஏங்கிடும் இனியவன் கேட்பதற்காய்
பாங்கினில் மலர்ந்திட்ட பாடல்!கவிப்
பாங்குடன் கவிகண்ணதாஸன் பாடல் அது!

சிறையினில் இருந்து இதயச்
சிறைதனை விரித்து இனிமை
நிறைவதாய் வரைந்த காவியம்!ஓவிய

நிறைவினைக் கொடுத்த காவியம்!புவியினில்
நிறைதமிழ் வடித்த பாநயம்!கவினுறை
உறைவிடப் பாசுரம்! பைந்தேன்தமிழ்த்

தேன்மொழிச் சொல்லோவியம்!அத்
தேன்மலர்க் காவியத்தைத்
தேன்மலர்ப்பொழுதினிலே சுவைத்தேனடி!

தேன்மொழித்தேவதையே!உன்
தேன் இதழ் சுவைக்கத்தந்தேனடி!மடல்
தேன் இதழ் படித்துச் சுவைப்பாயடி!அன்றுநீ

வான்வழி வலம் வந்தாய்!
மான்விழி மலர்தந்தாய்!உன்
தேன்மொழிச்சிரிப்பாலே கவித்

தேனிதழ் வெளுக்கவைத்தாய்!
மானிதழ் தவழ்கையிலே மலர்த்
தேனிதழ் நிறைந்ததடி!நிறைத்

தேன்தனை நீ குடித்தாய்!கவி
வான்மழை நான் கொடுத்தேன்!
தேன்மொழி நீ நிறைந்தாய்!உயிர்த்

தேனுடன் நீ கலந்தாய்!உன்
தேனுடல் கலந்ததனால் இதயத்
தேன்மொழி நிறைந்ததானால்....

தேன்மொழித்தேவதையே!
தேன்தமிழுக்கா பஞ்சமடி!
வான்வழி நிலவு மலர்த்
தேன்மடலுக்கா பஞ்சமடி!

மீண்டும் மறுமடலோடு உனைத்
தென்றலாய் வருடும் வரை....

அன்புடன்
ஆதித்ததாஸன்

இதயம் எழுதும் மடல் (19)


இதயத்து உணர்வுகள் ஏராளம்! என்
இதயத்துள் இடம்பிடித்த என்னவளே!மன
உதயத்துள் உள்ளவைகள் தாராளம்!தின
உதயத்துள் படம்பிடித்து வடம்பிடித்து

இதமாய் இழுத்தணைக்கும் மடல் உனக்காக...

சுற்றிவரக் காடுகள்!இதயம்
பற்றிப்படர்ந்த அந்தக்கிராமம்!
சுற்றிவரும் நீரோடைகள்!

சுழன்றுவரும் மனவுணர்வுள்
சுகந்தம் தரும் மலர்வனங்கள்....
சுழன்றுவரும் ஆசைகளால்....

சுகந்தச் சரம்தொடுக்க...
மகரந்தச்சுகம் கொடுக்க...
கரம்இணைக்கும் கோலங்கள்...

அழகுமயில் நீ!அன்றலர்ந்தமலராய்...
அழகுநடை பயின்று அந்தவீதியில்...
அழகுமலர்ப்பார்வைகளால் வடம்இழுத்தாய்...

இளமைமிகு இனிமைமலர்...இதழ்
இளநகைக்கோலங்களால் கோடுபோட செவ்
இளநீர்ச்சேலைக்குள் சோலையதாய்...

பழமையில் தோய்த்தெடுத்த
பார்வையில் நாணங்கள்....
இளமைதனைச் சீண்டிவிட...என்

பார்வையில் பதியம்வைத்த திங்களே...இதயக்
கோர்வைக்குள் சிக்கினாயே அன்று...கவிக்
கோர்வைக்குள் சுதியானாய் இன்று....

"பார்க்கவேண்டும்...கணம்தனும் பிரியாது
பார்வையோடு பதிக்கவேண்டும்" என்ற
தீர்வோடு மனம்படம்பிடிக்க....

"என்னடா இது வீண்வம்பு
வேண்டாமே!" என்று
கன்னத்தில் இதயம்......

இரண்டுபோட்டதுபோல் உணர்வோட...
பின்னலிட்ட கூந்தல்
திரண்டுவிடும் ஆசைகளால்...

"கன்னத்தில் முத்தமிடத்தயக்கம்
என்ன!" என்றுசொல்ல..கூட்டல்
பின்னமாய் சித்தம் குளிர்ந்துவிட.....

திருட்டுப்பார்வைக்குள் மின்னலாய்
உருவெடுத்தாயே நீ....
இருட்டுப்போர்வைக்குள் ஒளியாகிப்போனாயே நீ!

இரகசிய இனிமை நாடகத்துள்
இரகசிய இதயங்கள் சங்கமத்துள்
இரசனைகள் இடம்பிடித்த வண்ணம்...அடடா..

இரகசியமாய் முகவரிகூறி....
இரகசியச் சந்திப்புகள்...இனிமைச்சந்தங்கள்...
இரவுபகல் என்றில்லா இனிமைநிறைத்தித்திப்புக்கள்...

சிவந்த நிற மேனி மேலும்
சிவந்துவிடும் இதழ்ச்சத்தங்கள்...கன்னம்
சிவந்துவிட நாணங்கள் சுதிசேர்த்தகோலங்கள்...

"சிவ சிவா..என்னடா இது!" என்று
சிவமாய் சிவத்தோடு சிவமாய்...
சிவந்துநின்றாயே...இரண்டறக்கலந்தாயே அன்று...

"உடல் இணைந்திருக்கும் கணங்கள் இதழ்
மடல்வரைந்திருக்கும் சுகங்கள்...
கடல் கடந்துசென்றாலும் மறந்திடாதே!" என்றாய்!

"கடல் கடந்தால் என்ன...
உடல் பிரிந்தால் என்ன...உயிர்
உணர்வாய் இணைந்து வாழுமே!"என்றேன்!

இன்று நினைத்தாலும் இனிக்குதடி என்னவளே...
என்றும் தென்றலே! நீ பொங்கிவரும் கங்கையே!
ஒன்றி இணைந்துவிட்ட திங்களே!..இனிஎன்றும்
கன்றிவிடும் இனிமைக்கோலங்களே!...

கோலங்கள் தொடரும்..இனிமைக்
காலங்கள் வளரும்!கவிக்
கோலங்கள் மணம் நிறைக்கும்!
மீண்டும் மறுமடலில் இதமாய் உனைத்தீண்டும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்