திங்கள், 1 ஜூன், 2009

"கவிதை யு(மு)த்தம்!"


இப்படித் தொடங்கி
இப்படி முடிப்பதா!
அப்படித்தொடங்கி
அப்படி முடிப்பதா!
எப்படித்தொடங்கி
எப்படி முடிப்பதடி!நீ
இப்படிப் பார்த்தால்
எப்படி நான் வடிப்பதடி!

செப்படி நீ கண்ணே!
கலைப்பெண்ணே!
செப்படி வித்தைகளாய்
நினைவு நமை
எப்படி ஆட்டிப்
படைக்குமென்று காதல்
செப்படி வித்தை
யார் அறிதல் கூடும்!

முப்படி மூன்றாம்
பாலுக்குள் வீழ்ந்தால்
எப்படி எழுந்திடல்
முடியும்!கணமும்
அப்படியோர் நிலைகள்
உணர்ந்தவர் அறிவார்!
இப்படியோர் கலையில்
சுகம் இருப்பதை அறிவார்!

"தப்படி" என்று யார்
சொன்னார்!"இது
தப்படி!" என்று யார்
சொல்வார்! "இதில்
தப்படி நீ!" என்று யாரும்
சொல்வாரானால்
"தப்படி" அவர் சொல்வது
என்று நீ சொல்வாய்!

அப்படி ஒரு நிலை
காதலில்தானுண்டு!
அப்படி ஒருவகை
கவிதையுன்னில்தானுண்டு!
அப்படி ஒருநிலைக்
கலைக் கவிதை நீயடி!
அப்படி ஒருவகைக்
கலவிக் கவிதை நீபாலடி!

இப்படி ஒரு நிலை
உனக்குள் எனக்குள்!
இப்படி வரு நிலை
வேறுயாருக்குள் உண்டடி!
செப்படி பெண்ணே!
எப்படி நான் கவிசொல்ல!
செப்படி வித்தைகளைக்
கவியில் படம்பிடித்தால்......

"இப்படி யார்
கவிவடிப்பார்! இவர்தனை
இப்படிக் கவிவடிக்க
நீங்கள் தணிக்கையின்றி
எப்படி இவர் கவியை
அனுமதிப்பீர்!" என்று
அப்படி ஒரு கூட்டம்
குமுறிஒரு பிடி பிடித்திடுமடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக