திங்கள், 1 ஜூன், 2009

"உயிர்க்கவி!"

அடை மழைக்குள்
விடை குடைக்குள்!விழி
மடை திறக்கும்!காதல்
குடை விரிக்கும்!

கவி மடல் திறக்க
கவி மனம் துடிக்க இதழ்
குவித்திட நினைக்க முதல்
குவித்திடும் முத்தம்!

நடையது தளரும்!இள
நகையது புரியும்!இள
மடையது திறக்கும்!இள
முகையது சிலிர்க்கும்!

புவிநிலை மறக்கும்!
தவிநிலை வளர்க்கும்!
தவிப்பது தீர்க்க இதழ்கள்
குவிப்பது தொடரும்!

இடையது சிலிர்க்கும்!
கடைதனை விரிக்கும்!
விடையதைத் தேடி தேன்
மடைகளைத் திறக்கும்!

கவிமடல் திறந்து
கவிதைகள் எழுதும்!புதுக்
கவிதையாய் ஒன்று
கவிமடல் தனுள் உயிர்க்கும்!

மடையது திறந்து விழி
மடல்தனைத் திறந்து கவி
குடைநிழல் போலே புவி
நடைபயின்றிடச் சிரிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக