செவ்வாய், 2 ஜூன், 2009

"கவிச்சித்திரம்!"

சித்திரமே! சிந்திப்பாய்!கவிச்
சித்திரமே நீ சிந்திப்பாய்! புவிச்
சத்திரத்தில் கவிச்சித்திரத்தில்
சித்திரமே நீ சிந்திப்பாய்!

பத்திரமாய் மனம் சேர்த்துவைக்கும்!
சித்திரமாய் தினம் கோர்த்துவைக்கும்!
நித்திரையில் கண் விழிக்கவைக்கும்!
முத்திரையில் பண் செழிக்கவைக்கும்!

இத்தரை விழி சேர்த்தெடுத்து கவி
பத்தரை மாற்றாய் மனப்படம் பிடித்து
நித்திரை மனங்களை விழிக்கவைத்து
முத்திரை பதிப்பதே கவிதையென்பேன்!

சித்திரை நிலவுகள் சேர்ந்திருக்கும்!பல
முத்திரை முத்தங்கள் கோர்த்தெடுக்கும்!
சித்திரச் சோகங்கள் காட்டிநிற்கும்!சுய
சித்திரக் கோலங்கள் பாட்டில் வைக்கும்!

பத்திரமாய் பலர் பல கதைகள் அதைச்
சித்திரமாக்கிடும் கவிதைகளுள் சுயச்
சித்திரங்கள் சுய சிந்தையில்லாத மனச்
சித்திரங்கள் அவர் புராணங்களும் கவிச்

சித்திரத்தில் தினம் படம் பிடிக்கும்!மனச்
சித்திரத்தில் உன் மனச்சித்திரத்தில் தினம்
முத்திரையாய் இதைப்பதித்திடடி! இதய
முத்திரையாய் இதைப்பதித்திடடி!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5938&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக